பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் கண்டக்டர் மயங்கி விழுந்து சாவு

Added : நவ 21, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டர் மயங்கி விழுந்து இறந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 52; அரசு போக்குவரத்துக் கழகம் கடலுார் கோட்டத்தில் கடலுார் - விழுப்புரம் மார்க்கத்தில் கண்டக்டராக பணி புரிந்தார்.நேற்று மதியம் விழுப்புரத்தில் இருந்து கடலுார் பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தது. நேரக் காப்பாளர்

கடலுார் : கடலுார் பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டர் மயங்கி விழுந்து இறந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 52; அரசு போக்குவரத்துக் கழகம் கடலுார் கோட்டத்தில் கடலுார் - விழுப்புரம் மார்க்கத்தில் கண்டக்டராக பணி புரிந்தார்.

நேற்று மதியம் விழுப்புரத்தில் இருந்து கடலுார் பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தது. நேரக் காப்பாளர் அலுவலகத்தில் கையெழுத்து போட்டு பஸ்சிற்கு திரும்பி சென்றார். சிறிது துாரம் சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின் றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X