பொது செய்தி

தமிழ்நாடு

இலவச வீட்டுமனை பட்டா விபரம்; இணையதளத்தில் வெளியிட தகவல் ஆணையம் உத்தரவு

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : தமிழகம் முழுதும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது தொடர்பான பட்டியலை, இணையதளத்தில் பதிவேற்றும்படி, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பொத்துார் கிராமத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அவை, எந்தெந்த பயனாளிகளுக்கு


சென்னை : தமிழகம் முழுதும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது தொடர்பான பட்டியலை, இணையதளத்தில் பதிவேற்றும்படி, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.latest tamil news
திருவள்ளூர் மாவட்டம் பொத்துார் கிராமத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அவை, எந்தெந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன என்பது குறித்த தகவல்களை கேட்டு, பொன்னேரி தனி தாசில்தாருக்கு, குமார் என்பவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அனுப்பினார்.

அந்த மனுவுக்கு உரிய பதிலை, பொது தகவல் அதிகாரி தரவில்லை எனக்கூறி, மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த, மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் பிறப்பித்த உத்தரவு:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு இலவச மனை பட்டா வழங்கப்பட்டுள்ள விபரத்தை, மனுதாரர் கேட்கும் பகுதியில், ஏழு வாரங்களுக்குள், பொன்னேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தனி வட்டாட்சியர் வழங்க வேண்டும்


latest tamil news
மாநிலம் முழுதும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களில், இதுவரை யார் யாருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான பட்டியலை, மாவட்ட வாரியாக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

இதுதொடர்பான நடவடிக்கை விபரத்தை, இரண்டு மாதங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர், தகவல் ஆணையத்தில் தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.வழக்கு விசாரணை, 2021 ஜன., 19க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-நவ-202114:22:59 IST Report Abuse
S.Baliah Seer ஏண்டா இலவசம் என்று கூறி நாட்டை நாசம் செயிரீங்க. இலவச மனையை அவன் வித்துட்டு போய்டுவான்டா
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
21-நவ-202109:25:26 IST Report Abuse
Godyes நாட்டில் உள்ள கோயில் சாலை வழி ஓரம் ஏரி ஆறு ஓடை கால்வாய் சுடுகாடு கல்லறைகள் மசூதிகள் ரயில் பாதை ஓரங்கள் பஸ் நிலையங்கள் விமான நிலையங்கள் என அனைத்திற்குள்ளும் புறம்போக்கு இடங்கள் அடங்கியுள்ளன. அவைகள் அனைத்தையும் அளக்க வேண்டும்.அவைகள் எந்தெந்த சர்வே எண்களில் உள்ளன என்பதை பட்டியலிட வேண்டும். புறம்போக்கு கண்காணிப்புக்கு ஒரு புதிய துறை அமைப்பது அவசியம். அந்த காலத்தில் மக்கள் தொகை குறைவு. இதெல்லாம் பார்க்கவில்லை. இப்போது அப்படி இல்லை. ஒரு அடி இடங்கூட தனியாரின் ஆக்ரமிப்பில் உருமாறி இருக்கக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X