பொது செய்தி

தமிழ்நாடு

அறநிலையத் துறையில் புதிதாக தாசில்தார், தட்டச்சர் உட்பட 108 பணியிடங்களுக்கு நிதி ஒதுக்கீடு

Added : நவ 21, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை : ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகங்களில் தாசில்தார், தட்டச்சர் மற்றும் அலுவலக உதவியாளர் என, 108 பணியிடங்களை புதிதாக ஏற்படுத்த, நடப்பு நிதியாண்டிற்கு 3.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.திருக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, விழிப்புடன் பாதுகாத்து மீட்பதற்கு, 38 மாவட்டங்களில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களில், வட்டாட்சியர் உட்பட 108 பணியிடங்கள்

சென்னை : ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகங்களில் தாசில்தார், தட்டச்சர் மற்றும் அலுவலக உதவியாளர் என, 108 பணியிடங்களை புதிதாக ஏற்படுத்த, நடப்பு நிதியாண்டிற்கு 3.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.latest tamil news


திருக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, விழிப்புடன் பாதுகாத்து மீட்பதற்கு, 38 மாவட்டங்களில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களில், வட்டாட்சியர் உட்பட 108 பணியிடங்கள் உருவாக்கப்படும்' என, சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது, துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

அதன்படி, ஹிந்து சமய அறநிலையத் துறையின், 36 உதவி ஆணையர் அலுவலகங்களிலும், தலா ஒரு தாசில்தார் பணியிடம் புதிதாக ஏற்படுத்தலாம். துணை பணியிடங்களாக, தலா ஒரு தட்டச்சர், ஒரு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தலாம் என, அரசுக்கு ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பரிந்துரை செய்தார்.


latest tamil newsஅதை பரிசீலனை செய்த அரசு, மொத்தம் 108 பணியிடங்களை தோற்றுவிக்கலாம்; தாசில்தார் பணியிடங்களை, வருவாய் துறை வழியே, அந்தந்த மாவட்ட அலகில் இருந்து, மாற்றுப்பணி அடிப்படையில் நிரப்ப அனுமதி அளித்து உத்தரவிட்டது.

புதிய பணியிடங்களுக்கு, நடப்பு நிதியாண்டுக்கு தொடரும் செல வினமாக, ஊதிய செலவினத்திற்கு 3.41 கோடி ரூபாய்; தொடரா செலவினத்திற்கு 45 லட்சம் ரூபாய்.அலுவலக தளவாடங்களுக்கு 27 லட்சம் ரூபாய் என, மொத்தம் 3.86 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டு முதல் தொடரும் செலவினமாக, 8.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanm -  ( Posted via: Dinamalar Android App )
22-நவ-202108:00:14 IST Report Abuse
Devanm Aranilaya thuraye vendam. Piragu athil enna velai vaipu. Nangal velai koduthom enru kurikollava. Intha thuraiyai ozhithale koil urpadum
Rate this:
Cancel
Devanm -  ( Posted via: Dinamalar Android App )
22-நவ-202108:00:14 IST Report Abuse
Devanm Aranilaya thuraye vendam. Piragu athil enna velai vaipu. Nangal velai koduthom enru kurikollava. Intha thuraiyai ozhithale koil urpadum
Rate this:
Cancel
Devanm -  ( Posted via: Dinamalar Android App )
22-நவ-202108:00:14 IST Report Abuse
Devanm Aranilaya thuraye vendam. Piragu athil enna velai vaipu. Nangal velai koduthom enru kurikollava. Intha thuraiyai ozhithale koil urpadum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X