அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., அரசுக்கு எதிராக தமிழக காங்., பிரசாரம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
சென்னை : 'நாளை முதல் 29ம் தேதி வரை மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசார பயணம் மேற்கொள்ளப்படும்' என தமிழக காங்., தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மத்தியில் ஏழு ஆண்டுகளாக பா.ஜ. அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் அனைத்து நிலைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வால் மக்களின் நிலை

சென்னை : 'நாளை முதல் 29ம் தேதி வரை மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசார பயணம் மேற்கொள்ளப்படும்' என தமிழக காங்., தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:
மத்தியில் ஏழு ஆண்டுகளாக பா.ஜ. அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் அனைத்து நிலைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வால் மக்களின் நிலை கவலைக்குரியதாக உள்ளது.மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நாளை முதல் 29ம் தேதி வரை தமிழகம் முழுதும் பிரசார பயணம் மேற்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி தமிழகத்தில் நடக்க உள்ள பிரசார பயணத்தில் கட்சியினர் அனைவரும் கதர் குல்லா அணிந்து கையில் மூவர்ணக் கொடி ஏந்தி பங்கேற்க வேண்டும்.பா.ஜ. ஆட்சியின் அவலங்களை பட்டியலிட்டு தயாரிக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த போராட்டம் பா.ஜ. ஆட்சியை அகற்ற தமிழகத்தில் அடித்தளமாக அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X