அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.21 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி : அமைச்சர் பேச்சு

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் : ''கூட்டுறவு துறை மூலம் 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது,'' என, படப்பையில் நடந்த மாநில கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் பெரியசாமி பேசினார்.மாநில அளவிலான 68வது கூட்டுறவு வார விழா, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே, கரசங்காலில் நேற்று நடந்தது.அழைப்பாளர்களாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, ஊரக தொழில் துறை அமைச்சர்
 ரூ.21 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி : அமைச்சர் பேச்சு


ஸ்ரீபெரும்புதுார் : ''கூட்டுறவு துறை மூலம் 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது,'' என, படப்பையில் நடந்த மாநில கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் பெரியசாமி பேசினார்.

மாநில அளவிலான 68வது கூட்டுறவு வார விழா, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே, கரசங்காலில் நேற்று நடந்தது.அழைப்பாளர்களாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்றனர். மாநில, மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு, பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, அமைச்சர் பெரியசாமி பேசியதாவது-:
அரசு கஜானாவில் பணம் இல்லை என்றாலும், தமிழகத்தில் நல்ல ஆட்சியை தந்து, நாட்டின் சிறந்த முதல் அமைச்சர் என்ற பெயரை ஸ்டாலின் பெற்றுள்ளார்.நகை கடன் சம்பந்தமான பணிகள் முடிக்கப்பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நகை கடன் வைத்த 17 லட்சம் பேருக்கு, அவர்கள் இல்லம் தேடி சென்று, நகைகள் கொடுக்கப்படும்.

விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி என, ஒரே காலக்கட்டதில் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, நாட்டிலேயே கூட்டுறவு துறை மூலம் கடன் தள்ளுபடி கொடுக்கப்பட உள்ளது.தமிழகத்தில் கூட்டுறவு கடன் சங்கத்தால் குறுகிய காலக்கட்டத்தில் 4,767 கோடி ரூபாய் அளவிற்கு ஆறு லட்சம் பேருக்கு பயிர் கடன் கொடுக்கப்பட்டுள்ளது.சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் 1.20 லட்சம் பேருக்கு 700 கோடி ரூபாய் அளவுக்கு கடன் கொடுக்கப்படும்.

பொது வாழ்க்கையில் சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை அதிகமாக உள்ளவர்கள், கூட்டுறவு துறையின் உயர் அலுவலராக இருப்பர்; வேறு எந்த துறையிலும் பார்க்க முடியாது.பொங்கல் திருநாளில் தமிழகத்தில், அனைத்து குடும்பங்களிலும் பொங்கல் பொங்க வேண்டும் என்பதற்காக, பொங்கல் பரிசு அளிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளால் பொதுமக்கள் பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X