பொது செய்தி

தமிழ்நாடு

நகை கடன் ஆய்வு பணியை விரைந்து முடிக்க கூட்டுறவு துறை அறிவுரை

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வழங்கப்பட்ட நகை கடன் ஆய்வு பணியை விரைந்து முடிக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடியை பெறுவதற்காக, ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர், கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளனர். சிலர் போலி நகைகளை அடகு வைத்தும் கடன் பெற்றுள்ளனர். சில வங்கிகளில் முறைகேடு

சென்னை : கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வழங்கப்பட்ட நகை கடன் ஆய்வு பணியை விரைந்து முடிக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தி உள்ளது.



latest tamil news



தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடியை பெறுவதற்காக, ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர், கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளனர். சிலர் போலி நகைகளை அடகு வைத்தும் கடன் பெற்றுள்ளனர். சில வங்கிகளில் முறைகேடு கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில், 2021 மார்ச் வரை நிலுவையில் இருந்த நகை கடன்கள் மற்றும் நடப்பாண்டு ஏப்ரல் முதல் வழங்கிய நகை கடன்கள் குறித்து, ஆய்வுக்கு அரசு உத்தரவிட்டது.


latest tamil news



இதற்காக, வேறு மாவட்ட அதிகாரிகள் அடங்கிய தனி குழுவை அமைத்து, 100 சதவீதம் ஆய்வு செய்ய, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை செப்டம்பரில் உத்தரவிட்டது. இந்நிலையில், நகை கடன் ஆய்வு பணிகளை விரைவாக முடித்து, அதன் அறிக்கையை வரும், 30ம் தேதிக்குள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பி வைக்குமாறு, இணை பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
21-நவ-202116:40:58 IST Report Abuse
Soumya கட்டிங் கமிஷன் கரப்ஷன் கம்பெனி தன் குழுவை சேர்ந்தவனுங்கள தேடிப்புடிச்சி குடுப்பானுங்க
Rate this:
Cancel
21-நவ-202110:58:14 IST Report Abuse
SUBBU, MADURAI இதில் பெரும்பாலும் திமுகவினர்தான் அதிகம் பலன் அடைவார்கள். விடியல் அரசு தன் கட்சிக்காரர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு சலுகை அளிக்கவே இவ்வளவு நாள் தாமதம்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
21-நவ-202109:33:27 IST Report Abuse
duruvasar என்னிடம் திமுக உறுப்பினர் அட்டை இல்லை. எனக்கு கிடைக்க வழியில்லையா. நான் தற்போது திரிமுனால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கிறேன். எங்கள் தெரு செயலாளர் பதவிக்கான கடிதம் வந்துகொண்டிருக்கிறது என கூறுகிறார்கள். வர இருக்கின்ற கடிதத்தை திருப்பி அனுப்பிவிடலாமா? என்ன செய்யவேண்டுமென குழப்பமாய் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X