சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு டாக்டரை காரில் கடத்தி தாக்குதல் தி.மு.க., பிரமுகர் கைது; கார் பறிமுதல்

Added : நவ 21, 2021
Share
Advertisement
துாத்துக்குடி : துாத்துக்குடியில் அரசு மருத்துவரை காரில் கடத்திச்சென்று தாக்கிய தி.மு.க.,பிரமுகர் இளையராஜா கைது செய்யப்பட்டார்.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் முருகப்பெருமாள் 25. பல் மருத்துவர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக உள்ளார். இவரை நவ.18 ல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி தலைவரும் தி.மு.க.,பிரமுகருமான இளையராஜா காரில் கடத்தி
D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்


துாத்துக்குடி : துாத்துக்குடியில் அரசு மருத்துவரை காரில் கடத்திச்சென்று தாக்கிய தி.மு.க.,பிரமுகர் இளையராஜா கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் முருகப்பெருமாள் 25. பல் மருத்துவர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக உள்ளார். இவரை நவ.18 ல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி தலைவரும் தி.மு.க.,பிரமுகருமான இளையராஜா காரில் கடத்தி சென்றார்.

ஓட்டப்பிடாரத்தில் உள்ள தோட்டத்தில் வைத்து இரும்பு கம்பி, கட்டையால் தாக்கி அலைபேசி, பர்சை பறித்து துாத்துக்குடியில் இறக்கி விட்டனர். காயமுற்ற முருகப்பெருமாள் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்பாகம் போலீசார் நேற்று இளையராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், டாக்டர் முருகபெருமாள் சக பெண் டாக்டருடன் பழகியுள்ளார். இதனை விரும்பாத பெண்ணின் உறவினர் துாண்டுதலில் இளையராஜா அவரை கடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் இருவரை தேடிவருகிறோம் என்றனர்.

வாகனங்களில் மனித உரிமை என்ற வாசகம் பயன்படுத்தக்கூடாது என டி.ஜி.பி.,சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். டாக்டரை கடத்தி தாக்குதலுக்கு பயன்படுத்திய தி.மு.க.,பிரமுகரின் காரில் சர்வதேச மனித உரிமை அமைப்பின் தமிழக பொதுச்செயலாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X