பொது செய்தி

தமிழ்நாடு

'கவிமணி விருது' பெற விண்ணப்பம் வரவேற்பு

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : 'கவிமணி விருது' பெற, இளம் எழுத்தாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வகையில், 18 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில், ஆண்டுதோறும் மூவரை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சான்றிதழுடன், கவிமணி விருது வழங்கப்படும் என, சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அறிவித்தார்.அதன்படி, விருது


சென்னை : 'கவிமணி விருது' பெற, இளம் எழுத்தாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




latest tamil news




குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வகையில், 18 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில், ஆண்டுதோறும் மூவரை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சான்றிதழுடன், கவிமணி விருது வழங்கப்படும் என, சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அறிவித்தார்.

அதன்படி, விருது பெற பொது நுாலக இயக்ககம், இளம் படைப்பாளிகளிடம் இருந்து, தமிழில் கட்டுரைகள், சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன.படைப்புகளை சமர்ப்பிக்க விரும்பும் இளம் படைப்பாளிகள், www.tamilnadupubliclibraries.org என்ற இணையதள முகவரியில் இருந்து, சுய விபர படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.


latest tamil news




அதை முழுமையாக பூர்த்தி செய்து, டிச., 31க்குள் தங்கள் படைப்புகளுடன், 'பொது நுாலக இயக்ககம், 737/1 அண்ணா சாலை, சென்னை - 2' என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது dpltnservices@gmail.com என்ற 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் விபரங்களுக்கு, அதன் ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமாரை, 99414 33630 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-நவ-202103:51:54 IST Report Abuse
Bhaskaran பேத்திக்குத்தான் முதல் விருது தரனும் எப்படி ஒப்பனை செய்துகொள்வது என்பதற்காக .காங்கிரசில் மூத்த பெண் உறுப்பினர் அனந்த நாயகி ,ராஜாம்பாள் யசோதா ,இன்னோர் அம்மா பெயர் தெரியவில்லை ஆர்பாட்டமில்லாமல் .அரசியல் செய்தவர்களும் இருந்தனர்
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
21-நவ-202119:19:59 IST Report Abuse
spr இப்பொழுதுதான் "விருது வாங்கினார்" என்ற சொல்லின் பொருள் புரிந்தது. ஒருவர் திறமையை மதிக்க அவரே விண்ணப்பிக்க வேண்டுமா? படைப்புகளை ஆய்ந்து மக்கள் பாராட்டி ஏற்ற ஒன்றை இயற்றியவருக்கு தரலாமே
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-நவ-202117:39:53 IST Report Abuse
sankaseshan கவிமணி என்னும் அடையாளம் தேசிக விநாயகம் பிள்ளைக்கு மட்டுமே பொருந்தும் சிலர் விருது கிடைத்த பின் கவிமாமணி என்றும் சேர்த்து கொள்வார்கள் , டைமண்ட் முத்து கவிப்பேரரசர் என்று பீற்றி கொண்டாரே அது மாதிரி , நம்ம விஜய தாரிணி பிள்ளை அவர்களின் பெயர்த்தி நம்ப முடிகிறதா , பிள்ளை அமைதி ஆனவர் பேத்தி அலட்டல் காரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X