கீழணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 90 ஆயிரம் கனஅடி வெளியேற்றம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : மேட்டூர் அணை நிரம்பியதால், கீழணைக்கு நீர் வரத்து அதிகரித்து, 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு அதிகளவு தண்ணீர் வரத்து இருப்பதால், உபரி நீர் 65 ஆயிரம் கன அடிக்குமேல் திறக்கப்படுகிறது. திருச்சி, தஞ்சை டெல்டா பகுதிகளில் பெய்தமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு
  கீழணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 90 ஆயிரம் கனஅடி வெளியேற்றம்

காட்டுமன்னார்கோவில் : மேட்டூர் அணை நிரம்பியதால், கீழணைக்கு நீர் வரத்து அதிகரித்து, 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு அதிகளவு தண்ணீர் வரத்து இருப்பதால், உபரி நீர் 65 ஆயிரம் கன அடிக்குமேல் திறக்கப்படுகிறது. திருச்சி, தஞ்சை டெல்டா பகுதிகளில் பெய்தமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.முக்கொம்பு மேல் அணையிலிருந்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படுகிறது.

காவிரி ஆறு வழியாக கல்லணைக்கு அதிகளவு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால், கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில்25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.டெல்டா பகுதி மழை தண்ணீர் சேர்ந்து கீழணைக்கு 90 ஆயிரம் கன அடிதண்ணீர் வரத்து உள்ளது. கீழணை ஏற்கனவே நிரம்பியுள்ள நிலையில், அணைக்கு வரும் 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து வெளியேற்றப்படுகிறது.

அதேபோன்று, கடலுார் மாவட்டம் வீராணம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1465 மில்லியின் கனஅடியில், தற்போது 967 மில்லியன் கன அடி நிரம்பியுள்ளது.ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 61 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. ஏரிக்கு வரத்து வாய்க்கால்கள் மூலம் 61 கன அடி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X