சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீயில் கருகிய சிறுமி இறப்பு கொலை வழக்கில் தந்தை கைது

Added : நவ 21, 2021
Share
Advertisement
திருநெல்வேலி : வளர்ப்பு தந்தை வைத்த தீயில் கருகிய சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். தந்தை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டணத்தை சேர்ந்த அந்தோணிராஜ் 47. இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் நாகர்கோவிலை சேர்ந்த சுஜா 34, வை திருமணம் செய்துகொண்டார். சுஜாவின் முதல் கணவர் குருநாதன் இறந்து விட்டார். அவர் மூலம் பிறந்த மகராசி 14, மாதேஷ் 12, மகேஸ்வரி 10
 தீயில் கருகிய சிறுமி இறப்பு கொலை வழக்கில் தந்தை கைது

திருநெல்வேலி : வளர்ப்பு தந்தை வைத்த தீயில் கருகிய சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். தந்தை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டணத்தை சேர்ந்த அந்தோணிராஜ் 47. இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் நாகர்கோவிலை சேர்ந்த சுஜா 34, வை திருமணம் செய்துகொண்டார். சுஜாவின் முதல் கணவர் குருநாதன் இறந்து விட்டார். அவர் மூலம் பிறந்த மகராசி 14, மாதேஷ் 12, மகேஸ்வரி 10 ,ஆகியோருடன் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே வசித்தனர். அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்தனர். தினமும் பெற்றோரை சந்தித்து விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் மூன்று குழந்தைகளும் அங்குள்ள பேக்கரியில் இனிப்புகள் வாங்கி செல்வர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மகேஸ்வரி, பேக்கரியில் ஒரு தின்பண்டத்தை எடுத்துவிட்டு காசு தரவில்லை. இதுகுறித்து பேக்கரி ஊழியர், அந்தோணிராஜிடம் புகார் கூறியுள்ளார்.அந்தோணிராஜ் ஆத்திரத்தில் இரவில் சிறுமி மகேஸ்வரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் தீக்காயமுற்ற சிறுமி நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவில் இறந்தார். வளர்ப்பு தந்தை அந்தோணிராஜை கொலை வழக்கில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X