பொது செய்தி

தமிழ்நாடு

உலக தமிழ் பல்கலை சார்பில் சிறந்த நுால்களுக்கு விருது

Added : நவ 21, 2021
Share
Advertisement
சென்னை : உலக தமிழ் பல்கலை சார்பில், சிறந்த நுால்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில், எழுத்தாளர் ரஜத் எழுதிய நுால் உட்பட 14 சிறந்த நுால்களுக்கு விருது வழங்கப்பட்டது.அமெரிக்காவின் வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள, உலக தமிழ் பல்கலை சார்பில், சிறந்த நுால்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை அரும்பாக்கத்தில் நேற்று நடந்தது.விழாவில், பல்கலை வேந்தர்
 உலக தமிழ் பல்கலை சார்பில் சிறந்த நுால்களுக்கு விருது

சென்னை : உலக தமிழ் பல்கலை சார்பில், சிறந்த நுால்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில், எழுத்தாளர் ரஜத் எழுதிய நுால் உட்பட 14 சிறந்த நுால்களுக்கு விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள, உலக தமிழ் பல்கலை சார்பில், சிறந்த நுால்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை அரும்பாக்கத்தில் நேற்று நடந்தது.விழாவில், பல்கலை வேந்தர் சாந்தி ஓமகண்டம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினரான முன்னாள் நீதிபதி கணேசன், எழுத்தாளர் ரஜத் எழுதிய, தாமரை பிரதர்ஸ் பதிப்பகத்தின் 'ரத்தத்தின் ரத்தமே - எம்.ஜி.ஆர்., வரலாறு' என்ற புத்தகத்திற்கு சிறந்த நுாலுக்கான விருதை வழங்கினார்.

எழுத்தாளர் ரஜத், தமிழகத்தின் முன்னணி பத்திரிகைகளில் 1,500க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பேட்டி தொடர்கள் எழுதியுள்ளார். பல்வேறு நுால் களும் எழுத்தியுள்ளார்.தொடர்ந்து, 'அமெரிக்காவை ஆளும் தமிழ்ப் பெண்கள், தீர்க்கமாய் யோசிக்க தீக்குச்சிப் புதிர்கள், சோதனை இல்லாமல் சாதனை இல்லை' உள்ளிட்ட 14 நுால்களின் எழுத்தாளர்களுக்கு, விருதுகள் மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, பல்கலை சார்பில் 10 பேருக்கு முனைவர் பட்டங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், எழுத்தாளர் கந்தசாமி உட்பட பல்வேறு பதிப்பகங்களின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X