படிப்பிலும், வாழ்விலும் உயர நூலகம் வருகை தர அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

படிப்பிலும், வாழ்விலும் உயர நூலகம் வருகை தர அழைப்பு

Added : நவ 21, 2021
Share
ஈரோடு: தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, ஈரோடு சம்பத் நகரில் உள்ள, அரசின் நவீன நூலகத்தில் மாவட்ட மைய நூலகம், நவீன நூலகம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் பரிசு வழங்கி பேசியதாவது: மொபைல்போன் பார்க்கும் பழக்கத்தை மாணவ, மாணவியர் கைவிட்டு, புத்தகங்களை படித்தால் வாழ்க்கையில்

ஈரோடு: தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, ஈரோடு சம்பத் நகரில் உள்ள, அரசின் நவீன நூலகத்தில் மாவட்ட மைய நூலகம், நவீன நூலகம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் பரிசு வழங்கி பேசியதாவது: மொபைல்போன் பார்க்கும் பழக்கத்தை மாணவ, மாணவியர் கைவிட்டு, புத்தகங்களை படித்தால் வாழ்க்கையில் சாதனை படைக்க முடியும். நூலகத்துக்கு வந்து படிப்பதை பழக்கமாக கொண்டால் மட்டுமே படிப்பிலும், வாழ்விலும் நாம் அடுத்த நிலையை அடைய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X