பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி வெளியான சில மணி நேரத்தில் நடவடிக்கை; மாநகராட்சிக்கு பாராட்டு

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஈரோடு: நமது நாளதழில் செய்தி வந்த சில மணி நேரத்தில், ஸ்மார்ட் சாலையில் திறந்து கிடந்த தொட்டியை சீரமைத்து, பாதுகாப்பு செய்யும் பணியில், மாநகராட்சி நிர்வாகம் களமிறங்கியது. இதற்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ஈரோடு மாநகராட்சியில் பெரியார் நகரின் ஒரு பகுதியான சிதம்பரம் காலனி சாலை 'ஸ்மார்ட் சாலை' ஆக மாற்றப்பட்டு வருகிறது. சாலையில் பல

ஈரோடு: நமது நாளதழில் செய்தி வந்த சில மணி நேரத்தில், ஸ்மார்ட் சாலையில் திறந்து கிடந்த தொட்டியை சீரமைத்து, பாதுகாப்பு செய்யும் பணியில், மாநகராட்சி நிர்வாகம் களமிறங்கியது. இதற்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ஈரோடு மாநகராட்சியில் பெரியார் நகரின் ஒரு பகுதியான சிதம்பரம் காலனி சாலை 'ஸ்மார்ட் சாலை' ஆக மாற்றப்பட்டு வருகிறது. சாலையில் பல இடங்களில் ஜங்சன் பாய்ன்ட் தொட்டிகள் திறந்து கிடக்கின்றன. இதில் காந்திஜி சாலையில் இருந்து சாலைக்கு திரும்பும் வளைவில், வாகனங்கள் விபத்தில் சிக்கும் வகையில், தொட்டிகள் இருந்தன. இது குறித்து நமது நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வந்தது. செய்தியை படித்த சில மணி நேரத்தில், மாநகராட்சி அதிகாரிகள் களமிறங்கினர். ஜங்சன் பாய்ன்ட் தொட்டிகளை சுத்தம் செய்து, அதன் மேல் பகுதியை கான்கிரீட் சிலாப்புகளால் அடைக்கும் பணியை தொடங்கினர். காலையில் தொடங்கிய பணி, இரவு வரை நீடித்தது. சாலை உயரத்துக்கு கான்கிரீட் பெல்ட் பீம் அமைத்து, சிமென்ட் சிலாப்புகள் வைத்து மூடப்படும் என்று, பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X