பொது செய்தி

தமிழ்நாடு

வடிகாலில் தூர் வாரப்பட்ட மண் அப்புறப்படுத்துவதில் தாமதம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாநகரில் தொடர் மழையால், ஆர்.கே.வி.சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை உள்ளிட்ட பல இடங்களில், மழை நீர் சாலையில் ஓடியது. இதனால் பல ஆண்டுகளாக தூர் வாராத மழை நீர் வடிகால், சாக்கடைகளை தூர் வாரும் பணி முடுக்கி விடப்பட்டது. மழைக்கு முன் காவிரி சாலை சாக்கடைகள் தூர் வாரப்பட்டன. தற்போது இரண்டாவது மண்டலம், கே.என்.கே., சாலையில் மூன்று நாட்களாக சாக்கடை, மழைநீர் வடிகால் தூர்

ஈரோடு: ஈரோடு மாநகரில் தொடர் மழையால், ஆர்.கே.வி.சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை உள்ளிட்ட பல இடங்களில், மழை நீர் சாலையில் ஓடியது. இதனால் பல ஆண்டுகளாக தூர் வாராத மழை நீர் வடிகால், சாக்கடைகளை தூர் வாரும் பணி முடுக்கி விடப்பட்டது. மழைக்கு முன் காவிரி சாலை சாக்கடைகள் தூர் வாரப்பட்டன. தற்போது இரண்டாவது மண்டலம், கே.என்.கே., சாலையில் மூன்று நாட்களாக சாக்கடை, மழைநீர் வடிகால் தூர் வாரும் பணி நடக்கிறது. தினசரி மூன்று டன் மண் அகற்றப்படுகிறது. இதனால் மழை நீர் சாலையில் தேங்காமல், வடிகாலில் செல்லும். இதேபோல் மக்கள் புகார் தெரிவிக்கும் பகுதிகளிலும், சாக்கடை தூர் வாரப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். தூர் எடுத்த பல இடங்களில், சாலையில் சாக்கடை மண்ணை போட்டு வைத்துள்ளனர். மழை பெய்தால் மீண்டும் சாக்கடைக்கு செல்ல வாய்ப்புள்ளது. மண்ணை அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X