பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் கோவில் குத்தகை: கபாலீஸ்வரர் கோவிலில் அறிவிப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஈரோடு: கோவிலுக்கு சொந்தமான கடைகளின் வாடகை, குத்தகை தொகையை, நேரடியாக செலுத்துவதை தவிர்த்து, ஆன்லைனில் செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் கடைகள், நிலங்கள், மடங்கள் உள்ளிட்டவைகளுக்கான வாடகை, குத்தகை தொகையை, இதுவரை கோவில் அலுவலங்களில் நேரடியாக செலுத்தும் முறை நடைமுறையில் இருந்தது. இதில் பல்வேறு முறைகேடு நடந்ததால், இனி

ஈரோடு: கோவிலுக்கு சொந்தமான கடைகளின் வாடகை, குத்தகை தொகையை, நேரடியாக செலுத்துவதை தவிர்த்து, ஆன்லைனில் செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.


இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் கடைகள், நிலங்கள், மடங்கள் உள்ளிட்டவைகளுக்கான வாடகை, குத்தகை தொகையை, இதுவரை கோவில் அலுவலங்களில் நேரடியாக செலுத்தும் முறை நடைமுறையில் இருந்தது. இதில் பல்வேறு முறைகேடு நடந்ததால், இனி வாடகை மற்றும் குத்தகை தொகையை ஆன் லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. கடந்த, நவ.,1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் வளாகத்தில், அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், கபாலீஸ்வரர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட, மேற்கு அனுமந்தராயன் கோவில் வீதி அப்பர்சாமி மடம், வளையக்கார வீதி சந்தான கோபாலகிருஷ்ண ஆஞ்சநேய பஜனை மடம் ஆகியவற்றுக்கான குத்தகை மற்றும் வாடகை தொகையை, கோவில் அலுவலகத்தில் உள்ள, பொது வசூல் மையத்தில், டணூஞுஞு.ஞ்ணிதி.டிண இணைய வழியாக செலுத்தி, ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். குத்தகைதாரர்கள் தங்கள் மொபைல்போனில், திருக்கோவில் பெயர் மற்றும் ஐகூMகு, நெம்பரை தேர்வு செய்து அதில் குத்தகை, வாடகையை செலுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X