கவுந்தப்பாடியில் நாட்டு சர்க்கரை ஏலம்: பழநி கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.30 லட்சத்துக்கு கொள்முதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கவுந்தப்பாடியில் நாட்டு சர்க்கரை ஏலம்: பழநி கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.30 லட்சத்துக்கு கொள்முதல்

Added : நவ 21, 2021
Share
கோபி: கவுந்தப்பாடியில், 30 லட்சம் ரூபாய்க்கு நாட்டு சர்க்கரையை, பழநி கோவில் நிர்வாகம் சார்பில், கொள்முதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. இதில் இரண்டாம் தரம் (மீடியம்), 60 கிலோ மூட்டை, குறைந்தபட்சம், 2,730 ரூபாய், அதிகபட்சம், 2,770 ரூபாய் வரை விற்பனையானது. முதல் தரம் (திடம்), 2,920 ரூபாய் முதல், 2,950 ரூபாய் வரை

கோபி: கவுந்தப்பாடியில், 30 லட்சம் ரூபாய்க்கு நாட்டு சர்க்கரையை, பழநி கோவில் நிர்வாகம் சார்பில், கொள்முதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. இதில் இரண்டாம் தரம் (மீடியம்), 60 கிலோ மூட்டை, குறைந்தபட்சம், 2,730 ரூபாய், அதிகபட்சம், 2,770 ரூபாய் வரை விற்பனையானது. முதல் தரம் (திடம்), 2,920 ரூபாய் முதல், 2,950 ரூபாய் வரை ஏலம் போனது. விற்பனைக்கு வந்த, 1,594 மூட்டைகளில், 1,072 மூட்டைகளை, 30.07 லட்சம் ரூபாய் மதிப்பில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகத்தினர் கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X