இடைப்பாடி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிக அளவில் பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சேலம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால், சரபங்கா ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஓமலூரில் உள்ள சரபங்கா ஆற்றில் இருந்து வந்த தண்ணீர், சின்னப்பம்பட்டி, வெள்ளாளபுரம், புதுப்பாளையம், தாதாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சரபங்கா ஆற்றில் நிரம்பி வழிகிறது. இடைப்பாடி தாலுகா பகுதிகளில் உள்ள வெள்ளாளபுரம், கொண்டையம்பாளையத்து அணையும் நிரம்பியுள்ளது. சரபங்கா ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வழிந்தோடுவதால் ஆற்றோரங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. தாதாபுரம் அருகே உள்ள சம்போடை கிராமத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும், மக்கள் செல்லும் தார்ச்சாலையும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடியும் வரை மக்கள், செல்ல வழியில்லாததால் செம்போடை பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE