தி.மு.க.,வில் விருப்ப மனு வழங்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வில் விருப்ப மனு வழங்கலாம்

Added : நவ 21, 2021
Share
சேலம்: சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு நவ., 23, செவ்வாய் காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மாவட்ட பிரதிநிதிகள் மூலம், அந்தந்த ஊரில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். போட்டியிட விரும்புவோர், 10 ரூபாய் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி

சேலம்: சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு நவ., 23, செவ்வாய் காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மாவட்ட பிரதிநிதிகள் மூலம், அந்தந்த ஊரில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். போட்டியிட விரும்புவோர், 10 ரூபாய் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, நகர் மன்ற உறுப்பினர் கட்டணம், 5,000 ரூபாய், பேரூராட்சி மன்ற உறுப்பினர் கட்டணம், 2,500 ரூபாய் உடன் ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் போட்டியிடுவோர், பாதி கட்டணம் செலுத்தினால் போதுமானது. இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, மல்லூர், பனமரத்துப்பட்டி, அயோத்தியாபட்டணம், வாழப்பாடி, பேளூர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், கீரிப்பட்டி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர், ஆத்தூர் நகரம், நரசிங்கபுரம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X