பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி வெள்ளத்தில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
மேட்டூர்: காவிரி வெள்ளத்தில் மூழ்கி பல ஏக்கர் பயிர்கள் சேதமானது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியது. மேட்டூர் அணையில் நேற்று, 65 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே, உபரி நீர் வெளியேற்றும் காவிரி கரையோரம் விவசாயிகள், 5 ஏக்கர் பரப்பளவில் நெல்பயிர் சாகுபடி செய்தனர். நேற்று உபரி நீர் திறப்பு அதிகரித்ததால் சாகுபடி

மேட்டூர்: காவிரி வெள்ளத்தில் மூழ்கி பல ஏக்கர் பயிர்கள் சேதமானது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியது. மேட்டூர் அணையில் நேற்று, 65 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே, உபரி நீர் வெளியேற்றும் காவிரி கரையோரம் விவசாயிகள், 5 ஏக்கர் பரப்பளவில் நெல்பயிர் சாகுபடி செய்தனர். நேற்று உபரி நீர் திறப்பு அதிகரித்ததால் சாகுபடி நிலங்களில் வெள்ளநீர் புகுந்தது. இதில், பல ஏக்கர் நெல் நாற்றுகள், நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நீரில் மூழ்கிய பயிர்கள் அழுகி விடும் என்பதால் விவசாயிகள் வேதனையடைந்தனர். மேலும், கரையோரம் சாகுபடி செய்த உலராத பச்சை நெற்பயிர்களை விவசாயிகள் சிலர் அறுவடை செய்து சாலையோரம் உலர்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X