பொது செய்தி

தமிழ்நாடு

கோவை மாணவி தற்கொலை: சேலத்தில் ஆர்ப்பாட்டம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
சேலம்: கோவை மாணவி பாலியல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை கோரிநேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க மாநில தலைவி மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட தலைவி சந்திரபிரபா ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாணவி விவகாரத்தில் நீதி கிடைக்க, கடும் நடவடிக்கை எடுக்க

சேலம்: கோவை மாணவி பாலியல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை கோரிநேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க மாநில தலைவி மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட தலைவி சந்திரபிரபா ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாணவி விவகாரத்தில் நீதி கிடைக்க, கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். அதன்பின், சந்திரபிரபா கூறியதாவது: பள்ளி மாணவிக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலை வன்மையாக கண்டிக்கிறோம். சமீபகாலமாக, வன்கொடுமை அதிகரித்துள்ளது. அதை தடுத்து, பெண் குழந்தைகளுக்கு, பாதுகாப்பு கொடுக்க கடமைப்பட்டவர்கள் என்பதை, அனைவரும் உணரவே, இன்று, பெண்கள் உரிமை தினத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X