சேலம்: சேலம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான, ஆய்வுக்கூட்டம், நேற்று, நடந்தது. டி.ஆர்.ஓ., ஆலின் சுனேஜா, மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனர் ?ஷாபனா தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில், கடந்த 13,14ல், நடந்த சிறப்பு முகாம் உள்பட 18 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 21,900, நீக்கம் செய்ய, 7,092 பேர், திருத்தம் செய்ய, 4,696 பேர், தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய, 3,098 பேர் என, இதுவரை, மொத்தமாாக, 36,786 பேர், விண்ணப்பம் செய்துள்ளனர். கூடுதலாக, நவ.,20,21ல் சிறப்பு முகாம் நடக்கிறது. வரும் 30 வரை, சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பம் பெறப்பட்டு, 2022, ஜன.,இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE