பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் சூர்யா மீது பா.ம.க.,வினர் புகார்

Added : நவ 21, 2021
Share
Advertisement
வாழப்பாடி: வாழப்பாடி மற்றும் காரிப்பட்டியில் ஊர்வலமாக சென்ற பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தினர், ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மீது, நேற்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் சூர்யா மீது, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று வாழப்பாடி பஸ் ஸ்டாண்டிலிருந்து, பா.ம.க., மற்றும்

வாழப்பாடி: வாழப்பாடி மற்றும் காரிப்பட்டியில் ஊர்வலமாக சென்ற பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தினர், ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மீது, நேற்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் சூர்யா மீது, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று வாழப்பாடி பஸ் ஸ்டாண்டிலிருந்து, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஊர்வலமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தனர். உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் பாலசந்தர், பச்சமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், காரிப்பட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஊர்வலமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, புகார் கொடுத்தனர். பா.ம.க., மாநில துணை அமைப்பு செயலாளர் நாராயணன், மாவட்ட அமைப்புச் செயலாளர் செல்வம், மாவட்டச் செயலாளர் மாது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X