பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணையில் 2வது நாளாக 65,000 கனஅடி உபரி நீர் திறப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணையில், 2வது நாளாக நேற்று வினாடிக்கு, 65 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை நீடிக்கிறது. இதனால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பிய நிலையில், இரு அணைகளில் இருந்தும் நேற்று வினாடிக்கு, 22 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இந்த உபரி

மேட்டூர்: மேட்டூர் அணையில், 2வது நாளாக நேற்று வினாடிக்கு, 65 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை நீடிக்கிறது. இதனால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பிய நிலையில், இரு அணைகளில் இருந்தும் நேற்று வினாடிக்கு, 22 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இந்த உபரி நீர், தமிழக - கர்நாடகா எல்லையில் நீடிக்கும் மழையால் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வினாடிக்கு, 60 ஆயிரம் கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று முன்தினம் இரவு, 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று, இரண்டாவது நாளாக அணைக்கு, 65 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதில், 17 ஆயிரம் கனஅடி மின் நிலையங்கள் வழியாகவும், 48 ஆயிரம் கனஅடி உபரி நீர் போக்கி வழியாகவும் என மொத்தம், 65 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X