பொது செய்தி

தமிழ்நாடு

ஜவ்வரிசி ஆலைகளில் உற்பத்தி பாதிப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் குரங்குசாவடியில் சேகோசர்வ் செயல்பட்டு வருகிறது. இங்கு சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. உற்பத்தி பாதிப்பால் குறைந்த எண்ணிக்கையிலான மூட்டைகள் தான் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.இதுகுறித்து, ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: மரவள்ளிக்கிழங்கு அறுவடை நவம்பர் மாதம் தொடங்கி மார்ச்

சேலம்: சேலம் குரங்குசாவடியில் சேகோசர்வ் செயல்பட்டு வருகிறது. இங்கு சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. உற்பத்தி பாதிப்பால் குறைந்த எண்ணிக்கையிலான மூட்டைகள் தான் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.


இதுகுறித்து, ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: மரவள்ளிக்கிழங்கு அறுவடை நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் வரை நடைபெறும். கிழங்கிற்கு போதிய விலை கிடைக்காததால் பெரிய அளவில் அறுவடை தொடங்கப்படவில்லை. விவசாயிகள் எதிர்பார்த்த தொகை கிடைக்கும் போது அறுவடை அதிகமாகும். இதனால் ஆலைகளில் உற்பத்தி குறைந்துள்ளது. 70 சதவீத ஆலைகளும் இயங்காமல் தான் உள்ளன. சேகோசர்விற்கு, 7,000 முதல், 8,000 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். உற்பத்தி பாதிப்பால் தற்போது, 1,500 மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. 90 கிலோ ஜவ்வரிசி மூட்டை, 3,000 முதல், 3,500 ரூபாய், ஸ்டார்ச், 2,500 முதல், 2,600 ரூபாய் வரை விற்பனையாகிறது. விவசாயிகளுக்கான மரவள்ளிக்கிழங்கு அறுவடை பிரச்சினை முடியும் போது வழக்கம் போல் ஆலைகள் செயல்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X