சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன், ரேஷன் அரிசி பறிமுதல்; கடத்திய ஆசாமிக்கு காப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், அன்னதானப்பட்டி, கந்தப்பா காலனி, அம்மன்நகரில், ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் வந்தது. தெற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் அலுவலர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு, ஆம்னி வேனில், கடத்தலுக்கு தயாராக இருந்த ரேஷன் அரிசியை, வேனுடன் பறிமுதல் செய்தனர். மொத்தம், ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில், நாமக்கல் அடுத்த வெண்ணந்தூர், பழந்திண்ணிபட்டியை

சேலம்: சேலம், அன்னதானப்பட்டி, கந்தப்பா காலனி, அம்மன்நகரில், ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் வந்தது. தெற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் அலுவலர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு, ஆம்னி வேனில், கடத்தலுக்கு தயாராக இருந்த ரேஷன் அரிசியை, வேனுடன் பறிமுதல் செய்தனர். மொத்தம், ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில், நாமக்கல் அடுத்த வெண்ணந்தூர், பழந்திண்ணிபட்டியை சேர்ந்த தங்கராஜ் மகன் செல்வராஜ்,45, என்பதும், பொதுமக்களிடம், குறைந்த விலைக்கு, ரேஷன் அரிசியை வாங்கி, கோழிப்பண்ணைக்கு பயன்படுத்துவது தெரிந்தது. பின், புட்செல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, செல்வராஜ் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X