சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளையடித்த பொருட்கள் ஆன்லைனில் விற்பனை: பலே கொள்ளையர் இருவர் கைது

Added : நவ 21, 2021
Share
Advertisement
வீரபாண்டி: பல மாவட்டங்களில் வீட்டை உடைத்து கொள்ளையடித்த பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்த கொள்ளையர் இருவரை போலீசார் கைது செய்தனர்.சேலம் ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட எஸ்.பாலம் பெத்தாம்பட்டியில், 2019ல் நல்லம்மாள், 76, என்ற மூதாட்டி வீட்டில், ஒன்பது பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். கடந்த செப்டம்பரில் ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் கவுன்டர் காடு கோகிலா

வீரபாண்டி: பல மாவட்டங்களில் வீட்டை உடைத்து கொள்ளையடித்த பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்த கொள்ளையர் இருவரை போலீசார் கைது செய்தனர்.


சேலம் ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட எஸ்.பாலம் பெத்தாம்பட்டியில், 2019ல் நல்லம்மாள், 76, என்ற மூதாட்டி வீட்டில், ஒன்பது பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். கடந்த செப்டம்பரில் ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் கவுன்டர் காடு கோகிலா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்து சென்றனர். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர். சேலம் ரூரல் டி.எஸ்.பி., தையல்நாயகி தலைமையில், எஸ்.ஐ., அமிர்தலிங்கம், எஸ்.எஸ்.ஐ.,வெங்கடாஜலம், ஏட்டுகள் ஜெயகாந்தன், செல்வராஜ், சக்திவேல் முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் இரு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். நேற்று காலை ஆட்டையாம்பட்டி - திருச்செங்கோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக பல்சர் வாகனத்தில் வந்த இருவரை பிடித்து, தீவிரமாக விசாரித்ததில் திருப்பத்தூர் நாட்றாம்பள்ளியை சேர்ந்த மணி மகன் அர்ச்சுனன், 35, தர்மபுரி பென்னாகரம், பச்சியப்பன் மகன் மாதேஷ், 22, என்பதும் தெரியவந்தது. வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதில் அர்ச்சுனன் மீது சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் மற்றும் ஒரு கற்பழிப்பு வழக்கு உள்ளதும் தெரிந்தது. இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இதே போல் அர்ச்சுனனுக்கு வாகன உதவி செய்து கொள்ளைக்கு உடந்தையாக இருந்த மாதேஷ், மைனர் பெண்ணை கடத்தியதாக, 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டு, 15 மாதங்கள் சிறையில் இருந்ததும், அங்கு அர்ச்சுனனிடம் பழக்கம் ஏற்பட்டதும் தெரிந்தது. இவர்களிடம் இருந்து, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஒரு 'பல்சர்' பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து டி.எஸ்.பி., தையல்நாயகி கூறுகையில், ''கைது செய்யப்பட்டவர்கள் மீது பல மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர்கள் கொள்ளையடித்த நகைகளை 'ஆன்லைன்' மூலம் விற்பனை செய்து வந்துள்ளனர். பொதுமக்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து ஆன்லைனில் பொருட்களை வாங்க வேண்டாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X