சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் கொலை வழக்கு: கள்ளக்காதலன் கைது

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 22 வயது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை தனியார் தங்கும் விடுதியில், கடந்த, 17ல், ஆணுடன் அறை எடுத்து தங்கிய, 30 வயது பெண் கொலை செய்யப்பட்டிருந்தார். ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணையில், கடலூர் மாவட்டம், அடரிகளத்தூர் காஞ்சிராங்குளத்தைச் சேர்ந்த கருப்பையா மனைவி சிலம்பரசி, 30, என்பது

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 22 வயது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.


சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை தனியார் தங்கும் விடுதியில், கடந்த, 17ல், ஆணுடன் அறை எடுத்து தங்கிய, 30 வயது பெண் கொலை செய்யப்பட்டிருந்தார். ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணையில், கடலூர் மாவட்டம், அடரிகளத்தூர் காஞ்சிராங்குளத்தைச் சேர்ந்த கருப்பையா மனைவி சிலம்பரசி, 30, என்பது தெரிந்தது. தனிப்படை போலீசார் விசாரித்து, அடரிகளத்தூரை சேர்ந்த இளங்கோவன், 22, என்ற பொறியியல் பட்டதாரியை கைது செய்தனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: சிலம்பரசியின் கணவர் வெளிநாட்டில் பணி புரிகிறார். இவருக்கு, இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. சிலம்பரசிக்கு அதே ஊரிலுள்ள வேறு சமூகத்தை சேர்ந்த இளங்கோவனுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சில மாதங்களுக்கு முன், சேலம், மேட்டூர் தனியார் நிறுவனத்தில் இளங்கோவன் வேலைக்கு சென்றுள்ளார். நகை அடமானம் வைத்து வீட்டுமனை வாங்குவதாக கூறி, வீட்டிலிருந்த ஆறு பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு சிலம்பரசி ஆத்தூர் வந்துள்ளார். இளங்கோவனுடன் சென்று தனியார் நகை கடையில், தாலி உள்ளிட்ட நகைகளை கொடுத்து, 1.49 லட்சம் ரூபாய்க்கு, 28 கிராம் எடையில் புதிதாக சங்கிலி, தோடு, வெள்ளி செயின் எடுத்துள்ளனர். அந்த நகையுடன் தங்கும் விடுதிக்கு வந்தபோது, இளங்கோவனை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுத்த அவர், சிலம்பரசியின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு, 28 கிராம் நகையுடன் தலைமறைவானார். அடரி பகுதியில் இருந்த இளங்கோவனை கைது செய்து, நகையையும் பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X