பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினரிடமிருந்து விருப்ப மனுக்கள் வரவேற்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் விடுத்துள்ள அறிக்கை: தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்டத்திலுள்ள தர்மபுரி நகராட்சி, மற்றும் கடத்தூர், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், அரூர் டவுன் பஞ்.,களிலுள்ள வார்டுகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், இன்று முதல், தர்மபுரியிலுள்ள, தி.மு.க., மாவட்ட

தர்மபுரி: தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் விடுத்துள்ள அறிக்கை: தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்டத்திலுள்ள தர்மபுரி நகராட்சி, மற்றும் கடத்தூர், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், அரூர் டவுன் பஞ்.,களிலுள்ள வார்டுகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், இன்று முதல், தர்மபுரியிலுள்ள, தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில், விண்ணப்பத்தை இன்று காலை, 9:00 மணி முதல் வழங்கலாம். இதே போன்று, மேற்கு மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம் டவுன் பஞ்.,ல் போட்டியிட விருப்பம் உள்ளவர்களும், தர்மபுரியிலுள்ள, தி.மு.க., அலுவலகத்தில் மனு கொடுக்கலாம். தர்மபுரி நகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், 5,000 ரூபாய், டவுன் பஞ்., வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், 2,500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், பெண்கள் இதில் பாதி கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X