என்.எச்.,ல் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்; 17 பேர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என்.எச்.,ல் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்; 17 பேர் காயம்

Added : நவ 21, 2021
Share
ஓசூர்: ஓசூரிலிருந்து, திருப்பூருக்கு நேற்றிரவு அரசு பஸ் சென்றது. ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை கோபசந்திரத்தில் இரவு, 7:00 மணிக்கு, அப்பகுதி யுடர்னில், எம்.சாண்ட் ஏற்றி சென்ற லாரியை, ஓசூருக்கு செல்ல டிரைவர் திருப்பியபோது, சாலையில் கவிழ்ந்தது. அப்போது கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கி வந்த மற்றொரு லாரி டிரைவர், விபத்தில் சிக்கிய லாரி மீது மோதாமல் இருக்க வாகனத்தை

ஓசூர்: ஓசூரிலிருந்து, திருப்பூருக்கு நேற்றிரவு அரசு பஸ் சென்றது. ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை கோபசந்திரத்தில் இரவு, 7:00 மணிக்கு, அப்பகுதி யுடர்னில், எம்.சாண்ட் ஏற்றி சென்ற லாரியை, ஓசூருக்கு செல்ல டிரைவர் திருப்பியபோது, சாலையில் கவிழ்ந்தது. அப்போது கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கி வந்த மற்றொரு லாரி டிரைவர், விபத்தில் சிக்கிய லாரி மீது மோதாமல் இருக்க வாகனத்தை திரும்பினார். இதனால் சென்டர் மீடியனை தாண்டிய லாரி, அவ்வழியாக வந்த அரசு பஸ் மீது மோதியது. பெரிய விபத்தை தடுக்க பஸ் டிரைவர் பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த கார் மற்றும் மற்றொரு லாரி பஸ் மீது மோதியது. அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மோதிய விபத்தில், பஸ்சிலிருந்த, 16 பயணிகள் மற்றும் எம்.சாண்ட் லாரி டிரைவர் உட்பட, 17 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தால் போக்குவரத்து பாதித்தது. சூளகிரி போலீசார், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X