பொது செய்தி

தமிழ்நாடு

பாலத்தை சூழ்ந்த ரசாயன நுரை; வாகன போக்குவரத்து நிறுத்தம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 3,000 கன அடி நீர்வரத்து இருந்தது. அணை பாதுகாப்பு கருதி, நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதனால் பெருமளவு ரசாயன நுரை, அணைக்கு எதிரே உள்ள தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தில் தேங்கியது. போக்குவரத்து பாதித்ததால், தீயணைப்புத்துறையினர் நுரையை அகற்றினர். நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 2,563 கன அடியாக சரிந்தது.

ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 3,000 கன அடி நீர்வரத்து இருந்தது. அணை பாதுகாப்பு கருதி, நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதனால் பெருமளவு ரசாயன நுரை, அணைக்கு எதிரே உள்ள தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தில் தேங்கியது. போக்குவரத்து பாதித்ததால், தீயணைப்புத்துறையினர் நுரையை அகற்றினர். நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 2,563 கன அடியாக சரிந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.33 அடிக்கு நீர்இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில், 3,060 கன அடி நீர் திறக்கப்பட்டது. நேற்றும் ஆற்றில் அதிகளவு ரசாயன நுரை ஏற்பட்டு, பல அடி உயரத்திற்கு தட்டகானப்பள்ளி தரைப்பாலம் தெரியாத அளவிற்கு சூழ்ந்தது. எனவே, அவ்வழியாக செல்லும், அரசு டவுன் பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. பாலத்திற்கு முன்பாக தட்டகானப்பள்ளி செல்லும் சாலையை அடைத்த ஹட்கோ போலீசார், பாதுகாப்பு கருதி வாகன போக்குவரத்தை நிறுத்தினர். அதிகாரிகள் யாரும் பார்வையிட்டு, நுரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். கடந்த இரண்டு நாட்களாக தரைமட்ட பாலத்தை சூழ்ந்த அதிகளவு ரசாயன நுரையை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க, இதுவரை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X