தி.மு.க., அரசு செயல்படவில்லை; சீமான் காட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., அரசு செயல்படவில்லை; சீமான் காட்டம்

Added : நவ 21, 2021
Share
ஈரோடு: ''தி.மு.க., அரசு செயல்படவில்லை. தண்ணீர் சலனமின்றி அமைதியாக இருப்பது போல் உள்ளது,'' என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், திரைப்பட இயக்குனர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.தமிழ் தேச பொதுவுடமை கட்சி சார்பில், 2008 டிச.,14ல் ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்

ஈரோடு: ''தி.மு.க., அரசு செயல்படவில்லை. தண்ணீர் சலனமின்றி அமைதியாக இருப்பது போல் உள்ளது,'' என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், திரைப்பட இயக்குனர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ் தேச பொதுவுடமை கட்சி சார்பில், 2008 டிச.,14ல் ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடமை கட்சி பொது செயலாளர் மணியரசன் பேசினர். மூவரும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசியதாக, கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, ஈரோடு முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்காக சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர், குற்றவியல் நடுவர் வடிவேல் முன் நேற்று ஆஜராகினர். வரும், 30ல் மூவரையும் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.

நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே, நிருபர்களுக்கு சீமான் அளித்த பேட்டி: எட்டு வழி சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தீர்கள். ஆனால் அன்னூரில், 2,500 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்துள்ளீர்கள். வன பாதுகாப்பு சட்டத்துக்காக நாங்கள் போராடுகிறோம். இந்த சட்டத்தை தமிழக அரசு ஏற்கிறதா? இல்லையா? வேளாண் சட்டத்தை போல இந்த சட்டமும் கொடியது தான். தமிழகத்தில், தி.மு.க., அரசு செயல்படவில்லை. தண்ணீர் சலனமின்றி அமைதியாக இருப்பது போல் உள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ததை, சட்ட வரைவாக்கி மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டதால், ஆன்லைனிலேயே தேர்வு நடத்த வேண்டும் என்ற, மாணவர்கள் போராட்டதுக்கு, நாங்கள் ஆதரவு தெரிவித்தோம். அது தான் நியாயம். இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X