பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு பயன்படுத்திய 1,567 லி., சமையல் எண்ணெய்; பயோ டீசல் தயாரிப்புக்காக கொள்முதல்

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், தீபாவளியின்போது பயன்படுத்தப்பட்ட எண்ணெய், 1,567 லிட்டர் பயோ டீசல் உற்பத்திக்காக கொள்முதல் செய்யப்பட்டது.இதுபற்றி, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் கூறியதாவது: தீபாவளியின்போது, இனிப்பு, கார வகைகள் தயாரிப்போர் அனுமதி மற்றும் லைசென்ஸ் கட்டாயம் பெற்று தயாரித்து, விற்க வேண்டும் என வலியுறுத்தினோம். 100 ரூபாய் செலுத்தி, 70 பேர்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், தீபாவளியின்போது பயன்படுத்தப்பட்ட எண்ணெய், 1,567 லிட்டர் பயோ டீசல் உற்பத்திக்காக கொள்முதல் செய்யப்பட்டது.
இதுபற்றி, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் கூறியதாவது: தீபாவளியின்போது, இனிப்பு, கார வகைகள் தயாரிப்போர் அனுமதி மற்றும் லைசென்ஸ் கட்டாயம் பெற்று தயாரித்து, விற்க வேண்டும் என வலியுறுத்தினோம். 100 ரூபாய் செலுத்தி, 70 பேர் அனுமதி பெற்றனர். பெரிய அளவில் இனிப்பு, கார வகைகள் தயாரித்த, 50 பேர் உரிமம் பெற்று அவற்றை தயாரித்து விற்பனை செய்தனர். தீபாவளியின்போது, தரத்தையும், கலப்படம் போன்றவைகளை கண்டறியும் நோக்கில், இத்துறையில் உள்ள, 16 வட்டாரத்திலும் தலா ஒரு இனிப்பு, ஒரு காரம் மாதிரி என, 32 மாதிரிகள் சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். தீபாவளி பண்டங்களை பிரின்டிங் செய்யப்பட்ட பேப்பர்களில் கட்டி கொடுக்கக்கூடாது என கட்டாயமாக்கியதால், தூய்மையான பேப்பர், பிற கவர்களில் கட்டி கொடுத்தனர். ஓட்டல், உணவகங்கள், தீபாவளி பண்டங்கள் தயாரித்த இடங்களில் பொறிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட எண்ணெயை, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகம் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட ரூகோ நிறுவனத்தினர், ஒரு லிட்டர் பயன்படுத்திய எண்ணெயை, 25 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். அவ்வாறாக தீபாவளியின்போது மட்டும், 1,567 லிட்டர் எண்ணெயை வாங்கி சென்றனர். கடந்த ஒரு ஆண்டுக்குள், 3,000 லிட்டர் எண்ணெயை கொள்முதல் செய்தனர். இதன் மூலம் பல முறை பயன்படுத்திய எண்ணெயை, வாங்கி சென்று பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X