பொது செய்தி

தமிழ்நாடு

ஈ.வெ.ரா., பேரன் 'சென்டிமென்ட்'டை உடைப்பாரா; எம்.எல்.ஏ., அலுவலகத்தில் காலடி வைப்பாரா?

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஈரோடு: சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் சென்டிமென்ட் அதிகமாக பார்க்கப்படுகிறது. ஆனால், பாழாய்போன சென்டிமென்டால், ஒரு எம்.எல்.ஏ., அலுவலகம், எட்டு ஆண்டாக திறக்கப்படாத அவலம் ஈரோட்டில் தொடர்கிறது. இதை ஈ.வெ.ரா., பேரனும், எம்.எல்.ஏ.,வுமான திருமகன் உடைப்பாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், ஈரோட்டில் எஸ்.கே.சி., சாலையில் உள்ளது. ஈரோடு

ஈரோடு: சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் சென்டிமென்ட் அதிகமாக பார்க்கப்படுகிறது. ஆனால், பாழாய்போன சென்டிமென்டால், ஒரு எம்.எல்.ஏ., அலுவலகம், எட்டு ஆண்டாக திறக்கப்படாத அவலம் ஈரோட்டில் தொடர்கிறது. இதை ஈ.வெ.ரா., பேரனும், எம்.எல்.ஏ.,வுமான திருமகன் உடைப்பாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், ஈரோட்டில் எஸ்.கே.சி., சாலையில் உள்ளது. ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதியாக பிரிக்கப்படுவதற்கு முன், ஒருங்கிணைந்த ஈரோடு எம்.எல்.ஏ., அலுவலகமாக, 2001 மார்ச் 2ல் திறப்பு விழா கண்டது. அதன் பின் தென்னரசு, ராஜா ஆகியோர் எம்.எல்.ஏ.,வாக செயல்பட்டனர். இதில் ராஜா, அமைச்சராக பதவி உயர்வு பெற்றாலும், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து, பதவியை இழக்க நேரிட்டு பின்னடைவை சந்தித்தார். அதன் பின் ஈரோடு தொகுதி கிழக்கு, மேற்கு தொகுதியாக பிரிக்கப்பட, இந்த அலுவலகம் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் கிழக்கு தொகுதி முதல் எம்.எல்.ஏ.,வான சந்திரகுமார், அலுவலகத்தை பயன்படுத்தினார். ஆனால், கட்சி மற்றும் அலுவல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்தார். பல மாதங்கள் அலுவலகத்துக்குள் காலடி வைக்க முடியாத அளவுக்கு, சட்ட சிக்கல் ஏற்பட்டது. இதனால் ராசியில்லாத அலுவலகம் என்று, 'சென்டிமென்ட்' பட்டம் கட்டப்பட்டது. அடுத்து வந்த எம்.எல்.ஏ., தென்னரசு, 'சென்டிமென்ட்'டை உணர்ந்து, அலுவலகத்தை ஒரு நாள் கூட மிதிக்கவில்லை. கடந்த, 2021 தேர்தலில் ஈ.வெ.ரா., பேரன் திருமகன் வெற்றி பெற்றார். இதையடுத்து மே மாத இறுதியில், அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டது. பணியை எம்.எல்.ஏ., திருமகனும் பார்வையிட்டார். இதனால் அவர் அலுவலகத்துக்கு வருவார் என, மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தூய்மை செய்யும் பணி முடிந்து பூட்டப்பட்ட அலுவலகம், மீண்டும் திறக்கப்படவில்லை.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது: சென்டிமென்ட் காரணமாகவே, அலுவலகத்துக்குள் காலடி எடுத்து வைப்பதை தென்னரசு தவிர்த்தார். தற்போதைய எம்.எல்.ஏ., திருமகனாவது, அலுவலகம் வருவாரா? என்று தெரியவில்லை. அலுவலகமே பூட்டிக் கிடக்கும்போது எங்கள் குறைகளை எம்.எல்.ஏ.,விடம் எப்படி தெரிவிப்பது? அலுவலகத்துக்கு திருமகன் வருவாரா? என்று தெரியவில்லை. இவ்வாறு மக்கள் கூறினர். இதுகுறித்து கேட்டபோது, எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா., கூறியதாவது: எம்.எல்.ஏ., அலுவலகம் பயன்படுத்தும் நிலையில் இல்லை. மழை காலத்தில் ஒழுகுகிறது. அலுவலக தரையும் சேதமாகியுள்ளது. தற்போது அந்த சாலை, அலுவலகத்தை விட உயரமாக உள்ளது. மழை காலத்தில் அலுவலகத்தை தண்ணீர் சூழ்கிறது. அலுவலகத்தை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். கலெக்டர் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளாக பராமரிப்பில்லாததே தற்போதைய நிலைக்கு காரணம். இவ்வாறு திருமகன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X