சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் மீது மோதிய லாரி: டிரைவர், பயணிகள் தப்பினர்

Added : நவ 21, 2021
Share
Advertisement
சத்தியமங்கலம்: ஆசனூர் அருகே, அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதியதில், டிரைவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து கோவைக்கு, 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன், சத்தியமங்கலம் வழியாக ஒரு அரசு பஸ் நேற்று புறப்பட்டது. பெருந்துறையை சேர்ந்த டிரைவர் மோகனசுந்தரம், 50, ஓட்டினார். ஆசனூர், அரேபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே பெருந்துறையில்

சத்தியமங்கலம்: ஆசனூர் அருகே, அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதியதில், டிரைவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து கோவைக்கு, 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன், சத்தியமங்கலம் வழியாக ஒரு அரசு பஸ் நேற்று புறப்பட்டது. பெருந்துறையை சேர்ந்த டிரைவர் மோகனசுந்தரம், 50, ஓட்டினார். ஆசனூர், அரேபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே பெருந்துறையில் இருந்து தாளவாடி நோக்கி, பழைய இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு வந்த டாரஸ் லாரி, அரசு பஸ் மீது மோதியது. இதில் பஸ், லாரிகளின் முன்பகுதி கண்ணாடி நொறுங்கியது. அதேசமயம் பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்தது. பஸ் டிரைவர் மோகனசுந்தரம், லாரி டிரைவரான மதன்குமார், 31, லேசான காயமடைந்தனர். ஆசனூர் போலீசார் இருவரையும் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X