எந்த பொண்ணும் என்னை மாதிரி சாகக் கூடாது: கடிதம் எழுதி விட்டு பள்ளி மாணவி தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'எந்த பொண்ணும் என்னை மாதிரி சாகக் கூடாது': கடிதம் எழுதி விட்டு பள்ளி மாணவி தற்கொலை

Added : நவ 21, 2021
Share
கரூர்: 'இனி எந்த ஒரு பொண்ணும் என்னை மாதிரி சாகக் கூடாது' என, கடிதம் எழுதி விட்டு, கரூர் தனியார் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கரூரைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தந்தை இறந்து விட்டார். தாயாருடன் வசித்து வந்த மாணவி நேற்று முன்தினம் மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் மாணவி கடிதம் ஒன்றை டைரியில்

கரூர்: 'இனி எந்த ஒரு பொண்ணும் என்னை மாதிரி சாகக் கூடாது' என, கடிதம் எழுதி விட்டு, கரூர் தனியார் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூரைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தந்தை இறந்து விட்டார். தாயாருடன் வசித்து வந்த மாணவி நேற்று முன்தினம் மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் மாணவி கடிதம் ஒன்றை டைரியில் எழுதியுள்ளார். அதில், 'செக்ஸூவல் அராஸ்மென்ட்டுக்கு சாகற கடைசி பொண்ணு, நானாகத்தான் இருக்கணும். என்னை யார் இந்த முடிவு எடுக்க வச்சான்னு நான் சொல்ல பயமாக இருக்கு. இந்த பூமியில வாழ ஆசைப்பட்டேன். ஆனால், பாதியில போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும். ஐ லவ்யூ அம்மா, சித்தப்பா, மாமா உங்க எல்லோரையும் எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனால், உங்ககிட்ட எல்லாம் சொல்லாம போறேன். மன்னிருச்சுருங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்னை மாதிரி சாகக் கூடாது. சாரி மச்சான் சாரி' என, எழுதியுள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றிய கரூர் போலீசார், பள்ளியில் பாலியல் தொல்லை நடந்ததா அல்லது வீடுள்ள பகுதியில் நடந்ததா என விசாரிக்கின்றனர். பாலியல் தொல்லை கொடுத்த நபர் குறித்து மாணவி விபரம் எழுதாததால் போலீசார் குழப்பமடைந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மொபைல் போனை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். மாணவியின் உடலை நேற்று காலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். அவரது உடல் எரிவாயு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

காத்திருப்போர் பட்டியலில் இன்ஸ்பெக்டர்: கரூரில் பள்ளி மாணவி தற்கொலை குறித்து தனிப்படை போலீசார் பல கோணத்தில் விசாரித்தனர். ஆனால், இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், உரிய முறையில் விசாரிக்கவில்லை என, புகார் எழுந்தது. இதையடுத்து, கண்ணதாசனை திருச்சி சரகத்துக்கு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஐ.ஜி., சரவண சுந்தர் நேற்று மாலை உத்தரவிட்டார். மேலும், மாணவி தற்கொலை வழக்கை, கரூர் மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் எஸ்.பி., கீதாஞ்சலி மேற்பார்வையில், குளித்தலை மகளிர் இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தவிர, ஆறு தனிப்படை போலீசாரும் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X