தமிழ்நாடு

2022 ஜன., முதல் ஜி.எஸ்.டி., உயர்வு; சிறு, குறு ஜவுளி நிறுவனம் முடங்கும் அபாயம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கரூர்: வரும் ஜனவரி முதல் ஜி.எஸ்.டி., வரி உயர்வதால் சிறு குறு ஜவுளி தொழில் அடியோடு முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.கரூர் மாவட்டத்தில் உள்ளூர் ஜவுளி நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகின்றன. இங்கு, பெட்ஷீட், ஸ்கிரீன், தலையணை உறைகள், மேஜை விரிப்புகள், கைக்குட்டை, சோபா விரிப்பு, துண்டு ஆகிய வீட்டு உபயோக துணி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை

கரூர்: வரும் ஜனவரி முதல் ஜி.எஸ்.டி., வரி உயர்வதால் சிறு குறு ஜவுளி தொழில் அடியோடு முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ளூர் ஜவுளி நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகின்றன. இங்கு, பெட்ஷீட், ஸ்கிரீன், தலையணை உறைகள், மேஜை விரிப்புகள், கைக்குட்டை, சோபா விரிப்பு, துண்டு ஆகிய வீட்டு உபயோக துணி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை உத்தரபிரதேசம், பீஹார், மேற்கு வங்காளம் உட்பட பல்வேறு வடமாநில வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர். இதன்மூலம் ஆண்டுக்கு, 1,200 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்து வருகிறது. நேரடியாக, 10 ஆயிரம், மறைமுகமாக, 50 ஆயிரம் பேரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். தற்போது ஜி.எஸ்.டி., வரி உயர்வால் ஜவுளி துறை முடங்கும் அபாயம் காத்திருக்கிறது.

இதுகுறித்து, கரூர் வீவிங் மற்றும் நிட்டிங் பேக்டரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தனபதி கூறியதாவது: கடந்த இரண்டு மாதமாக வரலாறு காணாத வகையில் நூல் விலை, 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால், உற்பத்தி செய்யும் துணிகளின் விலையை ஏற்ற முடியாமல் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், வரும் ஜன., 1 முதல், ஜவுளிகள் மீதான ஜி.எஸ்.டி., வரியை, 5லிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது. ஏற்கனவே, 0 சதவீதம் வரியில் இருந்த, இந்த துறைக்கு, 5 சதவீதம் வரி விதிப்பு காரணமாக, 30 சதவீதம் உற்பத்தி குறைந்து விட்டது. தற்போது, வரியை உயர்த்தினால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக, 80 சதவீதம் விசைத்தறி, கைத்தறி ஊரக பகுதிகளில் இயங்கி வருகிறது. இந்த சிறு குறு ஜவுளி நிறுவனங்களில் உற்பத்தியை அடியோடு நசுக்கிவிடும் ஆபத்து உள்ளது. இந்த கூடுதல் வரி மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கும். உடனடியாக வரி உயர்வை வாபஸ் பெற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X