பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் எகிறிய விலை; மல்லிகை பூ கிலோ ரூ.2,400

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில், தொடர் மழையால் வரத்து குறைந்து, பூக்கள் விலை உயர்ந்து வருகிறது. மல்லி நேற்று ஒரு கிலோ, 2,400 ரூபாய்க்கு விற்பனையானது.ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, இரு பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு தினமும், 100 டன் வரை பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஓசூர் சுற்று வட்டாரத்தில்,

ஓசூர்: ஓசூரில், தொடர் மழையால் வரத்து குறைந்து, பூக்கள் விலை உயர்ந்து வருகிறது. மல்லி நேற்று ஒரு கிலோ, 2,400 ரூபாய்க்கு விற்பனையானது.
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, இரு பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு தினமும், 100 டன் வரை பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஓசூர் சுற்று வட்டாரத்தில், இம்மாத துவக்கத்தில் இருந்தே கனமழை பெய்து வருவதால், பூ மார்க்கெட்டிற்கு வரத்து கணிசமாக குறைந்துள்ளது. 100 டன் வரை வந்த பூக்கள் தற்போது, 10 டன் என்ற அளவில் உள்ளதாக, வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தொடர் மழையால் பூக்கள் செடிகளில் அழுகி வருவதுடன், பல தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதனால் வரத்து குறைந்து, நேற்று பூக்கள் வரத்து கடுமையாக உயர்ந்திருந்தன. மல்லிகை பூ ஒரு கிலோ, 2,400 ரூபாய்க்கும், கனகாம்பரம், 2,000 ரூபாய்க்கும், மஞ்சள் சாமந்தி, 140க்கும், ரோஜா, 100க்கும், முல்லை, 1,600க்கும், வெள்ளை சாமந்தி, 300க்கும், காக்கட்டான், 800க்கும், அரளி, 400 ரூபாய்க்கும், சம்பங்கி, 100க்கும் விலை போனது. மல்லி, கனகாம்பரம், முல்லை போன்றவற்றின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து வருவதால், பொதுமக்கள் பூக்கள் வாங்கும் அளவை குறைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X