சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரத்தில் கார் மோதி விபத்து: டாக்டர் உட்பட இருவர் பலி

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, மரத்தில் கார் மோதியதில், டாக்டர் உட்பட இருவர் பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை உயர்நிலைப்பள்ளி சாலையை சேர்ந்தவர் மஞ்சுநாத், 22. சமீபத்தில் எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்த இவர், தனியார் மருத்துவமனையில் பணியில் சேர இருந்தார். இந்நிலையில், பெங்களூருவில் நடந்த திருமண வரவேற்பில் பங்கேற்க மஞ்சுநாத் சென்றார். அவரது, நண்பர்களான

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, மரத்தில் கார் மோதியதில், டாக்டர் உட்பட இருவர் பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை உயர்நிலைப்பள்ளி சாலையை சேர்ந்தவர் மஞ்சுநாத், 22. சமீபத்தில் எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்த இவர், தனியார் மருத்துவமனையில் பணியில் சேர இருந்தார். இந்நிலையில், பெங்களூருவில் நடந்த திருமண வரவேற்பில் பங்கேற்க மஞ்சுநாத் சென்றார். அவரது, நண்பர்களான தேன்கனிக்கோட்டை அடுத்த ரங்கசந்திரத்தை சேர்ந்த பரத், 21, தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேதாந்து, 21, மற்றும் பைபாஸ் சாலையை சேர்ந்த கோகுல், 22, ஆகியோரும் உடன் சென்றனர். பின், நேற்று அதிகாலை மாருதி சுசூகி பலேனா காரில் ஊர் திரும்பினர். காரை கோகுல் ஓட்டினார். ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையிலுள்ள தண்டரை அருகே, அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரத் பலியானார். படுகாயமடைந்த டாக்டர் மஞ்சுநாத் உட்பட மூன்று பேரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்கு, ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட மஞ்சுநாத் உயிரிழந்தார். கோகுல், வேதாந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X