பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்பன் சீசன் தொடக்கம்: ஆடுகள் விற்பனை சரிவு

Added : நவ 21, 2021
Share
Advertisement
இடைப்பாடி: ஐயப்பன் சீசன் தொடங்கியுள்ளதால், கொங்கணாபுரத்தில் கூடிய வாரச்சந்தையில் ஆடுகளின் விற்பனை கடந்த வாரத்தை காட்டிலும் குறைந்தது. நேற்று, 1.10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கொங்கணாபுரம் வாரச்சந்தையில் அதிக அளவு ஆடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். நேற்று சராசரியாக, 1,700 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. 10 கிலோ ஆடு ஒன்று, 5,400 ரூபாய் முதல், 5,800 ரூபாய் வரை விற்பனையானது.

இடைப்பாடி: ஐயப்பன் சீசன் தொடங்கியுள்ளதால், கொங்கணாபுரத்தில் கூடிய வாரச்சந்தையில் ஆடுகளின் விற்பனை கடந்த வாரத்தை காட்டிலும் குறைந்தது. நேற்று, 1.10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கொங்கணாபுரம் வாரச்சந்தையில் அதிக அளவு ஆடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். நேற்று சராசரியாக, 1,700 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. 10 கிலோ ஆடு ஒன்று, 5,400 ரூபாய் முதல், 5,800 ரூபாய் வரை விற்பனையானது. கொங்கணாபுரம் ஆட்டுசந்தையில், 1,700 ஆடுகள், ஒரு கோடியே, 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இது குறித்து சேலம் மாவட்ட ஆடு வியாபாரிகள் சங்க தலைவர் பார்த்தசாரதி கூறியதாவது: கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால், ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் மாலை அணிந்து விரதம் இருப்பர். ஆட்டுக்கறி விற்பனை குறைந்த அளவிலேயே நடக்கும். அதனால் நேற்று ஆடுகள் விற்பனை மிகவும் குறைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X