பொது செய்தி

தமிழ்நாடு

பர்வத மலையில் மஹா தீபம் ஏற்ற சென்ற 5 பேருக்கு மூச்சுத்திணறல்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கலசப்பாக்கம்: பர்வத மலைக்கு மஹா தீபம் ஏற்றச்சென்ற, ஐந்து பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில், 4,560 அடி உயர பர்வத மலை மீது பிரம்மாம்பிகை சமேத மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு மஹா தீபம் ஏற்பட்டது. சுவாமி தரிசனத்துக்கு மலைக்கு சென்ற, 50 பேரில், 35 பேர் கீழே இறங்கினர். மற்ற, 15

கலசப்பாக்கம்: பர்வத மலைக்கு மஹா தீபம் ஏற்றச்சென்ற, ஐந்து பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில், 4,560 அடி உயர பர்வத மலை மீது பிரம்மாம்பிகை சமேத மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு மஹா தீபம் ஏற்பட்டது. சுவாமி தரிசனத்துக்கு மலைக்கு சென்ற, 50 பேரில், 35 பேர் கீழே இறங்கினர். மற்ற, 15 பேர் மலை மீது தங்கினர். கோவிலில் மின்வசதி இல்லாததால், ஜெனரேட்டர் வசதியுடன் மின்விளக்கு எரிய வைக்கப்படுகிறது. இதில், கோவிலினுள், 10 பேரும், ஜெனேரட்டர் அறையில் ஐந்து பேரும் தங்கினர். அப்போது, ஜெனரேட்டர் புகையால், அங்கு தங்கிய ஐந்து பேரும் மயங்கினர். உடனிருந்தவர்கள் தகவலின்படி திருவண்ணாமலை மற்றும் போளூர் தீயணைப்புத்துறை வீரர்கள், மருத்துவ குழுவினருடன் மலைக்கு சென்று அவர்களுக்கு முதலுதவி அளித்து, டோலி கட்டி மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X