நாய்களால் கடிபட்ட மயில் மீட்கப்பட்டு சிகிச்சையளிப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
பாலக்காடு: பாலக்காடு அருகே தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்த மயிலை காப்பாற்றி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து உயிருடன் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு வெண்ணக்கரையில் விளைந்த பயிர் நிலத்தில் இரை தேடி வந்த மயிலினை அங்கு சுற்றித் திரிந்த தெருநாய் கூட்டம் கடித்தது. மயில் தப்ப முயலும் போது சேற்றில் சிக்கிய ஆண் மயிலை அவ்வழியே
நாய்களால் கடிபட்ட மயில் மீட்கப்பட்டு சிகிச்சையளிப்பு

பாலக்காடு: பாலக்காடு அருகே தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்த மயிலை காப்பாற்றி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து உயிருடன் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காடு வெண்ணக்கரையில் விளைந்த பயிர் நிலத்தில் இரை தேடி வந்த மயிலினை அங்கு சுற்றித் திரிந்த தெருநாய் கூட்டம் கடித்தது. மயில் தப்ப முயலும் போது சேற்றில் சிக்கிய ஆண் மயிலை அவ்வழியே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த அந்த வார்டின் முன்னாள் கவுன்சிலர் அப்துல் ஷுக்கூர் பார்த்தார்.

உடல் முழுவதும் காயமடைந்த மயிலின் இறகுகள் அனைத்தும் நாய்கள் கடித்து காயப்படுத்தியிருந்தன. எழுந்திருக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த மயிலினை, நாய்களிடமிருந்து காப்பாற்றி அவர், தன் வாகனத்தில் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

காயங்களுக்கான சிகிச்சை அளித்து இறகுகளை கவனமுடன் மருத்துவர்கள் தையலிட்டனர். இதையடுத்து தாகம் தணிக்க தண்ணீர் குடித்த மயில், தன்னைக் காப்பாற்றிய மனித கரங்களில் பாசம் காட்டத் துவங்கியது. இறுதியில் சற்று எழுந்து நிற்க முடிந்த மயில் மேஜைமேல் நின்று பறக்க முயற்சித்தது. பின்னர் உடல் நலம் தேறிய மயிலினை தகவலறிந்து வந்த வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

பல்வேறு கரங்கள் ஒருங்கிணைந்த போதுதான் தேசிய பறவையின் உயிரை காப்பாற்ற முடிந்தது. ஆரோக்கியத்துடன் மீண்டும் மயில் பறந்து செல்லும் என்ற எதிர்பார்ப்பில் காப்பாற்றியவர்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X