பிணவறை குளிரூட்டி பெட்டியில் 7 மணி நேரமாக இருந்த உடல்: உயிரோடு இருந்ததால் அதிர்ச்சி

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
மொராதாபாத்: உ.பி.,யில் பிணவறையில் குளிரூட்டி பெட்டியில் 7 மணி நேரம் வைக்கப்பட்டிருந்த உடலில் உயிர் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகேஷ்குமார். கடந்த வியாழன் (நவ.,18) இரவு, அதிவேகமாக வந்த டூவீலர் இவர் மீது மோதியது. அதில், படுகாயமடைந்த ஸ்ரீகேஷ்குமார் மயக்கமடைந்த நிலையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு
mortuary, freezer, UttarPradesh, deadman, return, life

மொராதாபாத்: உ.பி.,யில் பிணவறையில் குளிரூட்டி பெட்டியில் 7 மணி நேரம் வைக்கப்பட்டிருந்த உடலில் உயிர் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகேஷ்குமார். கடந்த வியாழன் (நவ.,18) இரவு, அதிவேகமாக வந்த டூவீலர் இவர் மீது மோதியது. அதில், படுகாயமடைந்த ஸ்ரீகேஷ்குமார் மயக்கமடைந்த நிலையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக கூறி பிணவறையில், மறுநாள் பிரேத பரிசோதனை செய்ய வைக்க அறிவுறுத்தினர். இதன்படி, பிணவறையில் உள்ள குளிரூட்டி பெட்டியில் ஸ்ரீகேஷ்குமார் வைக்கப்பட்டார்.


latest tamil newsமறுநாள், சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்காக அவரது குடும்பத்தினரிடம் ஆவணங்களில் கையெழுத்தை மருத்துவமனை ஊழியர்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ஸ்ரீகேஷ்குமார் உடலில் அசைவு இருப்பதை அவரது உறவினர் மதுபாலா கண்டறிந்தார். இது குறித்து அவர் டாக்டரிடம் தெரிவித்தார். உடனடியாக டாக்டர்கள் பார்த்தபோது, ஸ்ரீகேஷ்குமார் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். ஷிவ் சிங் கூறியதாவது: ஸ்ரீகேஷ்குமார் படுகாயங்களுடன் அதிகாலை 3 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது பணியில் இருந்த டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் இதயத்துடிப்பு இல்லை. பல முறை பரிசோதனை செய்து பார்த்ததாகவும், இதன் பிறகே இறந்துவிட்டதாக அறிவித்ததாக பணியில் இருந்த டாக்டர் என்னிடம் கூறினார். காலை 10 மணிக்கு மேல் போலீசாரும், குடும்பத்தினரும் வந்து பார்த்த போது அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. அவரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது அரிதிலும் அரிதான சம்பவம் ஆகும். இதை அலட்சியம் எனக்கூறிவிட முடியாது என தெரிவித்தார்.

உறவினர்கள் கூறுகையில், ஸ்ரீகேஷ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறி மீரட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு இன்னும் சுய நினைவு வரவில்லை. ஆனால், அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் கூறுகின்றனர். அவரை குளிரூட்டியில் வைத்து டாக்டர்கள் கிட்டத்தட்ட கொன்றுவிட்டனர். அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - kanyakumari,இந்தியா
21-நவ-202123:31:07 IST Report Abuse
amuthan இது போன்ற அதிசயங்கள் உபியில் தான் அதிகம் நடக்கிறது
Rate this:
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
22-நவ-202114:53:00 IST Report Abuse
R MURALIDHARANஎதற்கு எதை முடிச்சு போடுவது என்ற விவஸ்த்தையே இல்லை...
Rate this:
Rio - lasi,ரோமானியா
25-நவ-202114:35:05 IST Report Abuse
Rioஇதை விட அதிசியம் மிசிநரி சர்ச்சில் நடக்குது, ஜெபக்கூட்டத்தில் நடக்குது. அத பத்தி பேச திராணி இருக்கா?...
Rate this:
sankar - Nellai,இந்தியா
27-நவ-202121:16:55 IST Report Abuse
sankarஆமாம் - இதோ வருகிறார்- இதோ வருகிறார் - என்று நான் பிறப்பதற்கு முன்பு இருந்தே சொல்லிக்கொண்டு இருக்காங்க -...
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
21-நவ-202122:31:55 IST Report Abuse
venkatan We treat but God cures.இதய த் துடிப்பு மற்றும் நாடித்துடிப்பு உணரப்படுவதில் அத்தனை மருத்துவர்களும் தவறியிருப்பதற்கு சாத்தியம் இல்லை. மற்றப்படி விபத்தில் சிக்கிய நோயாளியின் தோற்றம் பற்றி ய விபரம் மாறுபட்டிருக்கலாம்.மேலும் அதிசயமான மருத்துவ விந்தை நடந்திருக்கலாம்.நல்லது நடந்திருப்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சியே..
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
21-நவ-202119:38:06 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் எங்க ஆஸ்பத்திரிகளில் இதைவிட பெரிய காமெடியெல்லாம் நடந்துருக்கு நாங்கதான் டாப் உதாரணம் அரசு மருத்துவமனைகளின் பிரசவ வார்டில் அன்றாடம் நடக்கும் குழந்தைத் திருட்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X