பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள சேதங்களை பார்வையிட தமிழகம் வந்தது மத்திய குழு

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (7+ 2)
Share
Advertisement
சென்னை :தமிழகத்தில் மழை, வெள்ள சேதங்களை பார்வையிட, மத்திய குழு இன்று (நவ.,21) மதியம் சென்னை வந்தது. குழு உறுப்பினர்கள் இரு பிரிவாகப் பிரிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர்; வரும் 24ம் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்தித்தும் பேசுகின்றனர்.தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையால், பல மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி,
வெள்ள சேதம், தமிழகம், மத்திய குழு

சென்னை :தமிழகத்தில் மழை, வெள்ள சேதங்களை பார்வையிட, மத்திய குழு இன்று (நவ.,21) மதியம் சென்னை வந்தது. குழு உறுப்பினர்கள் இரு பிரிவாகப் பிரிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர்; வரும் 24ம் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்தித்தும் பேசுகின்றனர்.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையால், பல மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் என, பெரும்பாலான மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்தது. பயிர்கள் நீரில் மூழ்கின; சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. முதற்கட்டமாக தமிழக அரசு எடுத்த கணக்கெடுப்பில், 2,629.29 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் சார்பில், எம்.பி., - டி.ஆர்.பாலு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழகத்தில் முதற்கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்த சேத விபரங்கள் அடங்கிய மனுவை அளித்து, உடனடியாக 549.63 கோடி ரூபாய் வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.


குழுவில் யார் யார்?


அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட, மத்திய குழுவை அனுப்புவதாக அமித் ஷா தெரிவித்தார். அதன்படி, மத்திய உள்துறை இணை செயலர் ராஜிவ் சர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், நிதி மற்றும் செலவினங்களுக்கான அரசு ஆலோசகர் ஆர்.பி.கவுல், விவசாயத் துறை இயக்குனர் விஜய்ராஜ் மோகன், மத்திய நீர்வள கமிஷனின் சென்னை இயக்குனர் தங்கமணி. மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சக மண்டல அதிகாரி ரனன்ஜெய் சிங், மின் துறை துணை இயக்குனர் பாவ்யா பாண்டே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி வரபிரசாத் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் இன்று மதியம் சென்னை வந்தனர்.


latest tamil news



இந்தக் குழு, நாளையும், நாளை மறுதினமும் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, சேதங்களை பார்வையிட உள்ளது. குழு இரண்டு பிரிவாகப் பிரிந்து, நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஒரு குழுவும்; கன்னியாகுமரிக்கு மற்றொரு குழுவும் செல்கின்றன.மறுநாள் 23ம் தேதி கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஒரு குழுவும்; வேலுார், ராணிப்பேட்டைக்கு மற்றொரு குழுவும் செல்கின்றன.


latest tamil news



ஒரு குழுவை, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி; மற்றொரு குழுவை, வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த் வழிநடத்தி செல்வர். சேதங்களை பார்வையிட்ட பின், மத்திய குழு 24ம் தேதி தலைமை செயலகத்தில், முதல்வரை சந்திக்க உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7+ 2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
21-நவ-202119:58:24 IST Report Abuse
Sathyanarayanan Subramanian கண் துடைப்பு நாடகம் நடத்தி நிவாரண நிதி ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் ஆட்டைய போடாமல் இருப்பது நல்லது
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
21-நவ-202117:19:18 IST Report Abuse
Kumar விவசாயிகளில் 99 சதவிகிதம் இந்துக்கள் தான். அவர்கள் எப்படி போனால் என்ன. கொள்ளை அடிக்க‌ நல்ல சந்தர்ப்பம்.விடுவார்களா திராவிடர்கள். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
21-நவ-202116:39:12 IST Report Abuse
r ravichandran எப்படியும் 10000 கோடி நிவாரணம் கேட்க வேண்டும், அப்போதுதான் அதில் 9500 கோடி ரூபாய் அமுக்க முடியும். இது திமுக அரசுக்கு நல்ல வாய்ப்பு. நழுவ விட கூடாது. தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளை பற்றி அறிய ஒன்றிய அரசுக்கு என்ன உரிமை உள்ளது என்று இப்போது கேட்கமாட்டோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X