பொது செய்தி

தமிழ்நாடு

அரளிக்கொத்து வாய்க்காலை அளவீடு செய்ய உத்தரவு

Added : நவ 21, 2021
Share
Advertisement
கரூர்: 'அரளிக்கொத்து வாய்க்காலை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கரூர் தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.கரூர் கே.பி.பி., காலனி கணேசா நகர் பாலம் அருகில் அரளிக்கொத்து பாசன வாய்க்கால் ஆக்கிரமித்து வருவதால், 50 கோடி ரூபாய் மதிப்பு அரசு நிலம் பறிபோகும் அபாயம் என, நமது நாளிதழ் செய்தி வெளியானது. இதையடுத்து, இந்த வாய்க்காலை அளவீடு செய்து

கரூர்: 'அரளிக்கொத்து வாய்க்காலை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கரூர் தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.


கரூர் கே.பி.பி., காலனி கணேசா நகர் பாலம் அருகில் அரளிக்கொத்து பாசன வாய்க்கால் ஆக்கிரமித்து வருவதால், 50 கோடி ரூபாய் மதிப்பு அரசு நிலம் பறிபோகும் அபாயம் என, நமது நாளிதழ் செய்தி வெளியானது. இதையடுத்து, இந்த வாய்க்காலை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை வேண்டும் என, கரூர் தாசில்தார் மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: எல்.என்.எஸ்., கரூர் கே.பி.பி., காலனி கணேசா நகர் பாலம் அருகில் அமராவதி ஆற்றின் அரளிக்கொத்து கிளை பாசன வாய்க்காலை அளவீடு செய்து கால் ஊன்றிய இடத்தில் மணல் போட்டு சமன் செய்து ஆக்கிரமித்து வருகின்றனர் என, காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. ஆக்கிரமிப்பு உள்ளதா என, புல தணிக்கை, நில அளவை மேற்கொண்டு, அதற்குண்டான அறிக்கையை புகைப்படத்துடன் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. இது மிகவும் அவசரம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம், கரூர் மண்டல துணை தாசில்தார், வட்ட துணை ஆய்வாளர், எல்.என்.எஸ். வி.ஏ.ஓ., ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X