பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாநகராட்சிக்கு கமிஷனர் நியமனம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாநகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த, 1874ல் கரூர் நகராட்சி உருவாக்கப்பட்டது. அதன்பின், 1988ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2011ல் கரூர் நகராட்சியுடன் இனாம் கரூர், தான்தோன்றிமலை, நகராட்சிகள், சணப்பிரட்டி பஞ்., ஆகியவை இணைக்கப்பட்டன. தொடர்ந்து, கடந்த ஆக.,23ல் கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

கரூர்: கரூர் மாநகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த, 1874ல் கரூர் நகராட்சி உருவாக்கப்பட்டது. அதன்பின், 1988ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2011ல் கரூர் நகராட்சியுடன் இனாம் கரூர், தான்தோன்றிமலை, நகராட்சிகள், சணப்பிரட்டி பஞ்., ஆகியவை இணைக்கப்பட்டன. தொடர்ந்து, கடந்த ஆக.,23ல் கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அரசாணை, அக்., 21ல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனராக இருந்த ரவிச்சந்திரன், கரூர் மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X