நடைபயிற்சியில் விரட்டும் நாய்கள்; அச்சத்தில் பொதுமக்கள்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கரூர்: காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது நாய்கள் விரட்டுவதால் பொதுமக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.கரூர் நகராட்சி பகுதியில் உள்ள, 48 வார்டுகளில், 2,000க்கும் மேற்பட்ட நாய்கள் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் நாய்க்கடிக்கு ஆளாகும் சம்பவங்கள் தினமும் அரங்கேறி வந்தன. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, தினமும் குறைந்தபட்சம், 10 பேர் வரை, நாய்க்கடிக்கு சிகிச்சை

கரூர்: காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது நாய்கள் விரட்டுவதால் பொதுமக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.


கரூர் நகராட்சி பகுதியில் உள்ள, 48 வார்டுகளில், 2,000க்கும் மேற்பட்ட நாய்கள் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் நாய்க்கடிக்கு ஆளாகும் சம்பவங்கள் தினமும் அரங்கேறி வந்தன. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, தினமும் குறைந்தபட்சம், 10 பேர் வரை, நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வருகின்றனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: ஏதாவது பிரச்னை ஏற்படும் போது மட்டும் நாய் பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் நாய்களை பிடித்துச் சென்று, அறுவை சிகிச்சை செய்து, பிறகு விட்டு விடுகின்றனர். ஆனால், பெரும்பாலான பகுதிகளில் நாய்களை வளர்ப்பவர்கள் அவற்றைப் பிடிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் அறுவை செய்ய முடியாமல், நாய் இனப் பெருக்கம் தொடர்ந்து நடப்பதால், அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என, நகராட்சி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களை செல்பவர்கள் விரட்டுவதால், பலர் விழுந்து காயமடைகின்றனர். காலை நேரத்தில் நடை பயிற்சி செய்பவர்களை துரத்துகின்றன. அதில், முதியவர்கள் ஓட முடியாமல், நாய்க்கடிக்கு ஆளாக நேரிகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X