ஒரு ஷிப்ட் மட்டும் விசைத்தறி செயல்படும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஒரு ஷிப்ட் மட்டும் விசைத்தறி செயல்படும்'

Added : நவ 21, 2021
Share
பள்ளிபாளையம்: ''தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் வேண்டும் என்பதற்காக இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒரு ஷிப்ட் மட்டும் விசைத்தறி கூடம் செயல்படும்,'' என, பள்ளிபாளையம் வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த இரண்டு மாதமாக எப்போதும்

பள்ளிபாளையம்: ''தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் வேண்டும் என்பதற்காக இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒரு ஷிப்ட் மட்டும் விசைத்தறி கூடம் செயல்படும்,'' என, பள்ளிபாளையம் வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறினார்.


மேலும் அவர் கூறியதாவது: பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த இரண்டு மாதமாக எப்போதும் இல்லாதளவுக்கு நூல் விலை அதிகரித்துள்ளது. இதனால் விசைத்தறி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு சரிவை சந்தித்து வருகிறது. நூல் விலை உயர்ந்து வரும் இந்த நேரத்தில் தொடர்ந்து விசைத்தறி கூடம் செயல்பட்டால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஷிப்ட் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X