பொது செய்தி

தமிழ்நாடு

சிறுத்தை நடமாட்டமா? வனத்துறையினர் ஆய்வு

Added : நவ 21, 2021
Share
Advertisement
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி பகுதி கொல்லிமலைக்கு செல்லும் சாலையில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் உள்ள கண்காணிப்பு (சிசிடிவி) கேமராவில் கடந்த, 18ல் நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை உருவம் கொண்ட ஒரு வனவிலங்கு தாவி குதித்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி பகுதி கொல்லிமலைக்கு செல்லும் சாலையில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் உள்ள கண்காணிப்பு (சிசிடிவி) கேமராவில் கடந்த, 18ல் நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை உருவம் கொண்ட ஒரு வனவிலங்கு தாவி குதித்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வனச்சரகர் பெருமாள், வனத்துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 'சிசிடிவி' காட்சி, அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திடம் தொலைபேசியில் கேட்ட போது, ''சிறுத்தை இப்பகுதிக்கு வர வாய்ப்பே இல்லை; சாலையை கடந்து செல்வது பூனை தான்; சிறுத்தையாக இருந்தால் நாய்களை அடித்து கொன்றிருக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X