பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையம்: கலெக்டர் ஆய்வு

Added : நவ 21, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஐந்து நகராட்சிகள், 19 பேரூராட்சி பகுதிகளில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. நாமக்கல் நகராட்சியில், 39 வார்டுகளும், ராசிபுரத்தில், 27, திருச்செங்கோட்டில், 33, பள்ளிபாளையத்தில், 21, குமாரபாளையத்தில், 33 வார்டுகள் உள்ளன. ஐந்து நகராட்சிகள், 19 பேரூராட்சிகளில், மொத்தம், 447 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, 689 ஓட்டுச்சாவடிகள்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஐந்து நகராட்சிகள், 19 பேரூராட்சி பகுதிகளில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. நாமக்கல் நகராட்சியில், 39 வார்டுகளும், ராசிபுரத்தில், 27, திருச்செங்கோட்டில், 33, பள்ளிபாளையத்தில், 21, குமாரபாளையத்தில், 33 வார்டுகள் உள்ளன. ஐந்து நகராட்சிகள், 19 பேரூராட்சிகளில், மொத்தம், 447 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, 689 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஓட்டு எண்ணிக்கை மையங்களை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்வதற்காக, கல்லூரி, பள்ளிகளை, எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் முன்னிலையில், கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி கட்டடங்களில், நாமக்கல் நகராட்சி, எருமப்பட்டி, காளப்பநாய்க்கன்பட்டி, மோகனூர், பாண்டமங்கலம், பரமத்தி, பொத்தனூர், சேந்தமங்கலம், ப.வேலூர், வெங்கரை ஆகிய பேரூராட்சிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, ஓட்டு எண்ணிக்கை விபரங்களை கணினியில் பதிவேற்றுவதற்கான அறை மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையம் ஆகியவற்றுக்கு தேவையான அறைகளை நேரில் பார்வையிட்டு, இடவசதி, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, ராசிபுரம் எஸ்.ஆர்.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ராசிபுரம் நகராட்சி, அத்தனூர், பட்டணம், பிள்ளாநல்லூர், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஆகிய பேரூராட்சிகள். திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் நகராட்சிகளுக்கும், மல்லசமுத்திரம், படவீடு, ஆலாம்பாளையம் ஆகிய பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. தாசில்தார்கள் கண்ணன், கார்த்திகேயன், நகராட்சி கமிஷனர்கள் பொன்னம்பலம், சண்முகம், ஸ்டாலின் பாபு, ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X