பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு கிராம சபை கூட்டம்: மக்கள் எதிர்ப்பால் ஒத்தி வைப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
மோகனூர்: கொமரிபாளையம் ஊராட்சியில், பொதுமக்கள் கடும் எதிர்ப்பால் சமூக தணிக்கை மற்றும் சிறப்பு கிராமசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. மோகனூர் ஒன்றியம், கொமரிபாளையம் பஞ்., சங்கரம்பாளையம் நூலகத்தில், சமூக தணிக்கை, மற்றும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு, ஊராட்சி தலைவர் சுசிலா சார்பில் மேற்கொள்ளப்பட்டது. தகவலறிந்த ஊராட்சி உறுப்பினர்கள்,

மோகனூர்: கொமரிபாளையம் ஊராட்சியில், பொதுமக்கள் கடும் எதிர்ப்பால் சமூக தணிக்கை மற்றும் சிறப்பு கிராமசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. மோகனூர் ஒன்றியம், கொமரிபாளையம் பஞ்., சங்கரம்பாளையம் நூலகத்தில், சமூக தணிக்கை, மற்றும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு, ஊராட்சி தலைவர் சுசிலா சார்பில் மேற்கொள்ளப்பட்டது. தகவலறிந்த ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர், ஊராட்சி அலுவலகத்தில் திரண்டனர். அப்போது, 'எங்களுக்கு தெரியாமல் ஏன் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது' என, கேள்வி எழுப்பினர். இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பி.டி.ஓ., முனியப்பன் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். 'தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வேலைக்கு வராதவர்கள் பெயரிலும், இறந்துபோனவர்கள் பெயரிலும் அட்டை போடுவது உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது. இது குறித்து, நாங்கள், பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறைகேட்டில் ஈடுபட்ட பணித்தள பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு, புதிய பணித்தள பொறுப்பாளரை நியமிக்க வேண்டும்' என, சரமாரியாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து, 'வேறு ஊராட்சிக்கு மாற்றப்பட்ட ஊராட்சி செயலாளரை, மீண்டும் இங்கு பணியமர்த்த வேண்டும்' என, மனு அளித்தனர். அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக, பி.டி.ஓ., முனியப்பன் உறுதி அளித்தார். 'சமூக தணிக்கை மற்றும் சிறப்பு கிராமசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. முறையாக அறிவிப்பு செய்த பின் தேதி அறிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X